அஹ்மதாபாத்:ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் ஐ.பி.எஸ் அதிகாரி அபே சுதாசமா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.
ஜாமீன் அளிக்கப்பட்டால், இவ்வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என்ற சி.பி.ஐ.யின் கூற்றை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
அதிகரித்துவரும் தன் இடுப்பு வலி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்போவதாக கூறி அபே சுதாசமா கடந்த வாரம் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
சுதாசமா இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும், ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டால் சாட்சிகளை களைக்கும் வேளையில் ஈடுபடுவார் என்றும், ஏற்கனவே சாட்சிகளை மிரட்டியதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருப்பதாக சி.பி.ஐ வாதம் இருந்தது.
முன்னதாக இரு அறுவை சிகிச்சையையும் ஸ்டேர்லிங் மருத்துவமனையில் சுதாசமா மேற்கொண்டிருந்தார். ஆதலால் மூன்றாவது முறையும் ஸ்டேர்லிங் மருத்துவமனையிலே சிகிச்சை பெற வேண்டும் என்று சுதாசமாவின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கி.கே.உபத்யே, சுதாசமாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தார். அத்துடன் தனியார் மருத்துவமனையில் தான் சுதாசமாவின் சிகிச்சை நடத்தப்பட வேண்டும் என்ற வாதத்தையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
விசாரணைக்குட்பட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் அரசு மருத்துவமனை உள்ளதாகவும்,இதில் சுதாச்சமாவும் அடக்கம் என்று நீதி மேலும் குறிப்பிட்டார்.
அரசு மருத்துவமனைகளில் நல்ல வசதிகள் உள்ளதாகவும் ஆதாலால் அரசு மருத்துவமனையிலேயே சுதாசமா சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதி பரிந்துரைத்தார்.
முன்னதாக நீதிமன்றத்தின் உத்தரவின் படி, சுதாசமாவின் உடல்நிலையை முருத்துவர்கள் பரிசோதித்து, இடுப்பு வலி அதிகரித்தால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றனர்.
இவ்வழக்கில் சுதாசமா உட்பட 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளும், 11 போலீஸ் அதிகாரிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சிறையிலுள்ள ஹிமன்சு சிங்க், ஷ்யாம் சிங்க், என்.எச்.டாபிய் ஆகிய பணிநீக்கம் செயப்பட்ட அதிகாரிகள் தங்கள் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இம்மனு ஜூன் 24ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
173(2) பிரிவின் படி 90 நாட்கள் காவல், கடந்த மே 5ம் தேதியே முடிவடைந்த நிலையில், தாங்கள் இன்னும் சிறையில் உள்ளதாக அவர்கள் அம்மனுவில் முறையிட்டுள்ளனர். இதுவரை இதற்கு சி.பி.ஐ பதில் மனு அதுவும் தாக்கல் செய்யவில்லை.
மற்றொரு குற்றவாளியான பைலால ராதோத் (ஷொராஹ்ப்தீன் என்கவுண்டரில் கொல்லப்படும் போது போலீஸ் வாகனத்தின் டிரைவராக இருந்தவர்) தாக்கல் செய்துள்ள மனுவில் சி.பி.ஐ தாங்கள் விரும்பும்படி வாக்குமூலத்தை அளிக்குமாறு கட்டாயப்படுத்துவதாக புகார் செய்துள்ளார். இம்மனுவும் ஜூன் 24ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
siasat
0 கருத்துகள்: on "ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கு: சுதாசமாவின் ஜாமீன் மனு நிராகரிப்பு"
கருத்துரையிடுக