கடந்த மாதம் காஸ்ஸாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றி வந்த 'ஃப்ரீடம் ஃப்ளோடில்லா' கப்பல்களை இஸ்ரேல் அராஜகமாகத் தடுத்து நிறுத்தி தாக்கியது இதில் 9 தன்னார்வத் தொண்டர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களை கொன்றதும் இல்லாமல் மீதி உள்ளவர்களை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட ஒரு சமூக அமைப்பு கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு சட்ட பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் வந்துள்ளது.
ஃபலஸ்தீன் சட்ட உதவி நிதி ( Palastine Legal Aid Fund - PLAF) என்ற சமூக சேவை அமைப்பின் தலைவர் மேரி நஸ்ஸல் பதாய்னெஸ், "எங்கள் குழு அவர்களுக்காக வாதாடும், அவர்களின் உரிமைகளை நிலை நாட்ட பாடுபடும்". என்று கூறினார்.
ஆறு சர்வதேச வழக்கறிஞர்கள் தங்கள் சட்டக் குழுவில் இணைந்திருப்பதாக இந்த ஜோர்பினிய வழக்கறிஞர் கூறினார்.
0 கருத்துகள்: on "'ஃப்ரீடம் ஃப்ளோடில்லா' கப்பலில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள்"
கருத்துரையிடுக