16 ஜூன், 2010

பா.ஜ.கவின் பெண்கள் பிரிவு தலைவியாக ஸ்மிர்த்தி இராணி தேர்வு

மும்பை:பா.ஜ.கவின் பெண்கள் பிரிவு தலைவியாக ஸ்மிர்த்தி இராணி தேர்வு செய்யப்பட்டார்.

கட்சியின் மறு கட்டமைப்பு குழு மற்றும் மத்திய தேர்வு ஆணையம் மூலம் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் துஷ்யந்த் கெளதம் அட்டவணை சாதியினர் பிரிவுக்கும், பஹான் சிங் குலாஸ்தி அட்டவணை பழங்குடி இனப் பிரிவுக்கும் தன்வீர் அஹமத் சிறுபான்மையினர் விவகார பிரிவுக்கும் மற்றும் ஓம் பிரகாஷ் தன்கர் விவசாயிகள் பிரிவுக்கும் தலைவர்களாக தேர்ந்தெடுக்கபட்டனர்.

ஓம் பிரகாஷ் கோகுலி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவராக செயல்படுவார்.

மேலும் கட்சியின் இளைஞர்கள் பிரிவுக்கு அனுராங் தாகூர் தலைவராக செயல்படுவார்.

கட்சியின் மூத்த தலைவரான அட்டல் பிஹாரி வாஜ்பாய் 20 உறுப்பினர்கள் கொண்ட மத்திய தேர்தல் குழுவின் உறுப்பினராக தொடர்ந்து செயல்படுவார்.

மேலும் கட்சித் தலைவர் நிதின் குமார் கத்காரி மற்றொரு மூத்த தலைவர் L.K அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கையாநாயுடு, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மற்றும் ராஜ்நாத் சிங்க் ஆகியோர் மத்திய தேர்தல் குழுவின் அங்கத்தினராக செயல்படுவார்கள்.
--Agencies

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பா.ஜ.கவின் பெண்கள் பிரிவு தலைவியாக ஸ்மிர்த்தி இராணி தேர்வு"

கருத்துரையிடுக