2 ஜூன், 2010

சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட இஸ்ரேல்

ஜெருசலம்:ஃப்ரீ காஸ்ஸா இயக்கத்தின் தலைமையிலான காஸ்ஸா நிவாரண கப்பல் மீதான ராணுவ நடவடிக்கை சர்வதேச அளவில் இஸ்ரேலை தனிமைப்படுத்தியுள்ளது.

எச்சூழலிலும் ஆதரவு கரம் நீட்டும் ஐரோப்பிய நாடுகள் கூட இவ்விவகாரத்தில் இஸ்ரேலை கைவிட்டுவிட்டன. அமெரிக்கா மட்டும்தான் இஸ்ரேலை வெளிப்படையாக கண்டிக்க தயங்கிய நாடு.

இஸ்ரேலை கண்டிக்கும் ஐ.நா வின் தீர்மானத்துடன் ஐரோப்பிய யூனியனும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது இஸ்ரேலுக்கு எதிர்பாராத பதிலடியாக மாறிவிட்டது.

முஸ்லிம் நாடுகளில் இஸ்ரேலின் நண்பனாக கருதப்பட்ட துருக்கியும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் எதிரி நாடாகிப் போனது. இத்தாக்குதல் மூலம் வருடக்கணக்கில் தொடரும் காஸ்ஸா மக்களுக்கெதிரான இஸ்ரேலின் மனிதத்தன்மையற்ற செயல்கள் சர்வதேச அளவில் சர்ச்சைக்குரியதாக மாறியதும் இஸ்ரேலுக்கு பேரிடியாக மாறியுள்ளது.

பிரிட்டன்,பிரான்சு, சீனா, ரஷ்யா,ஸ்வீடன் ஆகிய நாடுகள் காஸ்ஸாவின் மீதான தடையை உடனடியாக நீக்கவேண்டும் என்று உறுதியாக கோரியுள்ளன.

ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை, ஜீவகாருண்ய,பத்திரிகையாளர்கள் அடங்கிய சமாதானக் குழுவினரை இஸ்ரேல் சிறையிலடைத்ததும் சர்வதேச அளவில் கூடுதல் எதிர்ப்பை சந்திக்கவேண்டிய சூழல் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு உள்நாட்டிலும் எதிர்ப்பு வலுக்கிறது. அதிகாரிகளினால் ஏற்பட்ட விவேகமற்ற செயல் இது என இஸ்ரேலிய பத்திரிகைகள் குற்றஞ்சாட்டுகின்றன.

கப்பலில் இருந்தவர்களிடமிருந்து ஏற்பட்ட தாக்குதலுக்குதான் தற்காப்பிற்காக சுட்டோம் என்றும், கப்பலில் அல்காய்தாவினர் இருந்ததாகவும் கூறும் இஸ்ரேலின் பொய்ப்பிரச்சாரம் விலைப் போகவில்லை.

இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சமாதானக் குழுவினரா அல்காயிதாவைச் சார்ந்தவர்கள் என துருக்கி கேள்வி எழுப்புகிறது.

முழுமையான பரிசோதனைக்கு பின்னரே அனைவரையும் கப்பலி ஏற்றியதாகவும், அவர்களிடத்தில் ஆயுதங்கள் ஒன்றுமில்லை என துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்குதலைக் குறித்த செய்திகளை மூடி மறைக்க பெரும்பாலும் இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதன் காரணமாக பத்திரிகையாளர் உள்ளிட்ட நிவாரண கப்பலில் இருந்தவர்களை அஷ்தோதில் சிறையிலடைத்துள்ளனர்.

இஸ்ரேலிய அமைச்சரவையின் அனுமதியில்லாமல் இந்த ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டதாக அரசு அதிகாரிகள் சிலர் கூறியதாக இஸ்ரேலிய பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட காஸ்ஸா மக்கள் கொல்லப்பட்ட வேளையில் கூட வெளிப்படாத எதிர்ப்பு சர்வதேச அளவில் ஃப்ரீடம் ஃப்ளோடில்லா கப்பல் தாக்கப்பட்டபோது ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வற்புறுத்தலுக்கிணங்க காஸ்ஸா எல்லையை மூடிய இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையினால் சர்வதேச அளவில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பின் காரணமாக எகிப்து காலம் குறிப்பிடாமல் எல்லையை திறந்துள்ளது இஸ்ரேலை சிக்கலில் தள்ளியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட இஸ்ரேல்"

கருத்துரையிடுக