திருவனந்தபுரம்:திருவனந்தபுரம் கேஸரி நினைவு அறக்கட்டளையில் வைத்து நடந்த நேருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார் கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன்.
அப்பொழுது அவர் கூறியதாவது:"மாநிலத்தில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதவாதம் வலுப்பெற்று வருகிறது. மதசார்பற்ற முகமூடி அணிந்த காங்கிரஸின் கீழ்தான் மதவாத சக்திகள் வலுப்பெறுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு மதசார்பற்றக் கொள்கை வெறும் பேச்சில் மட்டும்தான். மதவாத சக்திகளின் வளர்ச்சியை தடுக்க காங்கிரஸால் இயலவில்லை.
ஜோஸஃப்-மாணி அணிகளின் இணைப்பிற்கு பின்னணியில் மதகுருமார்களின் தூண்டுதல் உள்ளது. நான்கு வருடம் எங்களுடனிருந்த ஜோசஃப் திடீரென இடதுசாரி கூட்டணியிலிருந்து பிரிந்துச் சென்றது சிலரின் நிர்பந்தம் காரணமாகத்தான் என்பது உறுதியாகிறது.
ஜமாஅத்தே இஸ்லாமிக்கு இடதுமுன்னணி ஒருபோதும் நல்ல சான்றிதழ் வழங்கியதில்லை. ஜமாஅத்தே இஸ்லாமியுடன் கூட்டணிவைக்க விரும்புகின்றவர்கள்தான் அவர்களை மதவாதிகள் எனக்கூறியுள்ளனர்.
முஸ்லிம் லீக் தலைவர்கள் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர்." இவ்வாறு தொடர்ந்து உரையாற்றினார் அச்சுதானந்தன்.
கேரள முதல்வரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் வயலார் ரவி கருத்துத் தெரிவிக்கையில்; "கிறிஸ்தவ-முஸ்லிம் மதவாதத்தை காங்கிரஸ் வளரச் செய்கிறது எனக்கூறும் முதல்வர் ஹிந்து மதவாதத்திற்கு ஊக்கமளிக்கிறார். ஹிந்து மதவாதத்தை இணங்கச் செய்வதற்கான மோசமான தந்திரம் இது. முக்ரிக்கும், கப்பியாருக்கும் பென்சன் இல்லை என்று கூறி ஏற்கனவே வி.எஸ்.அச்சுதானந்தான் ஹிந்து மதவாதத்துடன் கூட்டணி சேர திட்டமிட்டிருந்தார். அதன் தொடர்ச்சிதான் இது" என்றார் அவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "முஸ்லிம்,கிறிஸ்தவ மதவாதத்தை குற்றஞ்சாட்டும் வேளையில் ஹிந்து மதத்தீவிரவாதத்தை மறந்துபோன கம்யூனிச முதல்வர்"
கருத்துரையிடுக