கொல்கத்தா:அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மேற்குவங்காள சட்டசபைத் தேர்தலின் அரையிறுதியாக சித்தரிக்கப்பட்ட கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திர்ணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரும் பெரும்பான்மையை பெற்று கம்யூனிசத்தின் கோட்டையை தகர்த்துள்ளது.
மொத்தம் 141 இடங்களில் 98 இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. சி.பி.எம்மிற்கு 31 இடங்கள்தான் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது.
கொல்கத்தா நகரசபையையும்,பெரும் போராட்டத்திற்குப் பிறகு விதான் நகர் நகர சபையையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
70 சதவீதம் பேர் வாக்களித்த கொல்கத்த மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியன தனித்தே போட்டியிட்டன.
தோல்வியை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.58 நகர சபைகளில் திரிணாமுல் காங்கிரஸ் 30 நகரசபைகளிலும், இடதுசாரிகள் 17 நகரசபைகளிலும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

0 கருத்துகள்: on "மேற்குவங்காளம்:கலைகிறது கம்யூனிச மாயை"
கருத்துரையிடுக