2 ஜூன், 2010

காஸ்ஸா கடற்பரப்பின் முற்றுகை தொடரும்- நெதன்யாகு

இஸ்ரேலில் நேற்று(ஜுன்1) நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவையின் சிறப்பு கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாகு உரை நிகழ்த்தினார்.

'இஸ்ரேலிய படை மே 31ம் நாள் அதிகாலையில் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியதைக் கண்டு வருத்தமடைந்தேன்.ஆனால் இஸ்ரேலிய கடற்படையின் கடமை நீதியானது.காஸ்ஸா கடற்பரப்பின் முற்றுகையை இஸ்ரேலிய படை தொடரும்' என்று நெதன்யாகு தெரிவித்தார்.

'காஸ்ஸாவைக் கட்டுப்படுத்தியுள்ள ஹமாஸிற்கு மறைமுக சுரங்க வழி மூலம் எகிப்திலிருந்து ஆயுதங்கள் கடத்தப்படும் திறன் உண்டு. கடல் வழியும் திறக்கப்பட்டால் காஸ்ஸாவுக்கு ஏற்றி கடத்தப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும்' என்றும் நெதன்யாகு கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காஸ்ஸா கடற்பரப்பின் முற்றுகை தொடரும்- நெதன்யாகு"

கருத்துரையிடுக