2 ஜூன், 2010

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு பின்னணி கண்டுபிடிப்பு - ராஜஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

ஜெய்பூர்:அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பிற்கும் மலேகான் மற்றும் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்புண்டு என்ற கோணத்தில் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் வெற்றி கண்டுள்ளது' என்று ராஜஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் சாந்தி த்ரிவால் தெரிவித்துள்ளார்.

அஜ்மீர் தர்கா வளாகத்தில் வைக்கப்பட்ட குண்டுக்களை தயாரித்த ஒரு நபரை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக 'தி ஹிந்து' நாளிதழுக்கு பேட்டி அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த நபர் தான் குண்டு தயாரிப்பதிலிருந்து திட்டம் தீட்டுவது என அனைத்து சதிகளிலும் ஈடுபட்டவராவார்.

மேலும் சில நபர்களை ராஜஸ்தான் ஏ.டி.எஸ் அடைந்துவிட்டதாகவும் அவர்களை அடையாளமும் கண்டுதுள்ளதாகவும், மிக முக்கியமான தடையங்கள் இவர்களுக்கெதிராக எங்களிடம் கிடைத்துள்ளன என்றும் அமைச்சர் சாந்தி மேலும் தெரிவித்தார்.

இவர்களின் திட்டங்கள் மத்திய பிரதேசத்தை மையமாக வைத்து செயல்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இக்குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான சுனில் ஜோஷி ஏற்கனேவே கொல்லப்பட்டுள்ளான்.ஆர்.எஸ்.எஸ்ஸில் முக்கிய பதவியில் இருந்த ஜோஷிவிற்கு கைதாகியுள்ள தேவேந்திர குப்தாவுடன் தொடர்பு இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.சுனில் ஜோஷியும் குப்தாவும் அவ்வப்போது தொலைபேசிகளில் உரையாடியுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள மஹோவ் என்ற இடத்தின் காங்கிரஸ் தலைவரை சுனில் ஜோஷி தான் கொன்றுள்ளான். பின்னர், அக்கொலையின் சாட்சியாளரான அவரின் மைத்துனரையும் ஜோஷி கொன்றுள்ளான் என்றார்.

குப்தாவை பற்றி கூறிய சாந்தி;'ரமேஷ் குமார் என்ற பெயரில் போலி ஆதாரங்களை காட்டி ஜம்டாடா,அசான்சொல் மற்றும் சித்தரஞ்சன் ஆகிய இடங்களில் தேவேந்திர குப்தா சிம் கார்டுகளை வாங்கியுள்ளார்' என்றார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் 'பாபுலால் யாதவ்' என்ற பெயரில் குப்தாவால் வாங்கப்பட்டவை.

இவர்கள் அனைவருக்கும் கர்னல் புரோஹித்துடன் தொடர்புள்ளது. மலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள புரோஹித், சுனில் ஜோஷி தான் அஜ்மீர் குண்டு வெடிப்பிற்காண திட்டங்களை தீட்டியதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.

சுனில் ஜோஷியின் தகவல்களையும், நடவடிக்கைகளையும் அசிம் ஆனந்த் என்பவர் புரோஹித்திற்கு தெரியப்படுத்துவார்.

இக்குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தன் பங்கினை மறுத்தாலும், அதை திடமாக மறுக்கிறார் அமைச்சர் சாந்தி தரிவால்.

விசாரணையில் முன்னேற்றம்
இதனிடையே, 2007ல் நடந்த அஜ்மீர் குண்டுவெடிப்பில் லோகேஷ் ஷர்மா என்ற குற்றவாளியை ஏ.டி.எஸ் கைது செய்து நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன் ஆஜர் படுத்தப்பட்டான்.பின்னர் நீதிபதி அவரை 14 நாள் போலீஸ் ரிமாண்டிற்கு உத்தரவிட்டார்.

சர்மா அஜ்மீர் சென்ட்ரல் ஜெயிலில் பின்னர் அடைக்கப்பட்டார். தேவேந்தர குப்தா மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரை ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் தேவேந்தர குப்தா அஜ்மீரையும், சந்திரசேகர் லேவேயையும் மற்றும் லோகேஷ் ஷர்மா மஹு ஆகிய இடங்களை சேர்ந்தவர்களாவர்.
source:Siasat

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு பின்னணி கண்டுபிடிப்பு - ராஜஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்"

கருத்துரையிடுக