2 ஜூன், 2010

ஷொராஹ்ப்தீன் நண்பர் துளசி பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கு:சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைத்தது குஜராத் போலீஸ்

காந்திநகர்:உச்சநீதிமன்றத்தின் ஆணை இருந்தும்,கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் இழுத்தடித்ததற்கு பிறகு,இறுதியாக குஜராத் சி.ஐ.டி ஷொராஹ்ப்தீன் நண்பர் துளசிராம் பிரஜாபதியின் போலி என்கவுண்டர் வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைத்தது.

இதனை தொடர்ந்து,இவ்வழக்கின் ஆவணங்களும் ஆதாரங்களும் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கிறது.

துளசிராம் பிரஜாபதி,ஷொராஹ்ப்தீனின் நெருங்கிய நண்பனும், ஷொராஹ்ப்தீனின் போலி என்கவுண்டரை நேரில் கண்ட ஒரே சாட்சியாவார்.

பின்னர் போலீசிற்கு சவாலாக விளங்கிய பிரஜாபதியையும், குஜராத் போலீஸ் போலி என்கவுண்டரில் சுட்டுத் தள்ளியது. இவ்வழக்குகளை ஒருதலைபட்சமாக விசாரித்து வந்த குஜராத் போலீஸ் விசாரணையில் திருப்பதி அடையாத உச்ச நீதிமன்றம், கடந்த ஜனவரியில்,ஷொராஹ்ப்தீன் மற்றும் அவரின் மனைவி கவுசர்-பீ வழக்கையும், பிரஜாபதியின் வழக்கையும் உச்சநீதி மன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியது.

இது குறித்து,அபெக்ஸ் நீதிமன்றமும் இவ்வழக்கின் ஆழமான சதிகளை கண்டறியுமாறு சி.பி.ஐக்கு உத்தரவிட்டது.

பிரஜாபதி வழக்கு சி.பி.ஐ. வசம் வந்த உடனேயே, சி.பி.ஐ குஜாராத் போலிசின் ஆவணங்களை எதிர்பார்க்காமல்,மிக துரிதமாக செயல்பட்டு போலீஸ் அதிகாரிகள் விபுல் அகர்வால்,இன்ஸ்பெக்டர் ஆஷிஷ் பாண்டிய உட்பட 4 போலீஸ் அதிகாரிகளை கைது செய்தது பாராட்டுதலுக்குரியது.

ஷொராஹ்ப்தீன் வழக்கு விசாரணை
இதற்கிடையே,ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில், போலீஸ் அதிகாரிகள் ஹிமான்சு சிங்க் மற்றும் பாலகிருஷ்ண சொபே ஆகியோரை சி.பி.ஐ நேற்று தொடர்ந்து 6 மணிநேரத்திற்கு மேல் விசாரித்தது.

காலை 10 மணியளவில் வந்து இறங்கிய 3 சி.பி.ஐ. அதிகாரிகள் கொண்ட குழு, தன் விசாரணையை மாலை வரை தொடர்ந்தது.

ஷொராஹ்ப்தீன்,அவரின் மனைவி கவுசர்-பீ மற்றும் துளசிராம் ஆகிய மூவர் மஹாராஷ்டிராவிலிருந்து ஹைதராபாத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது, குஜராத் போலீஸ் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய சதி திட்டம் தீட்டியதாக அபே சுதாச்சமா உட்பட 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளை சி.பி.ஐ ஏற்கனேவே கைது செய்துள்ள செய்தி நினைவிருக்கலாம்.
source:Siasat,Mumbai mirror

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷொராஹ்ப்தீன் நண்பர் துளசி பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கு:சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைத்தது குஜராத் போலீஸ்"

கருத்துரையிடுக