16 ஜூன், 2010

ஹிட்லர் பற்றிய படம்? யூதர்களிடையே அதிர்ச்சி

நாஜித் தலைவர், ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் பற்றி ஹிந்தியில் திரைப்படம் எடுக்கவிருக்கும் செய்தி யூதர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஹிட்லர் இந்தியாவை நேசித்ததாகவும், அவர் இந்திய விடுதலைக்கு மறைமுகமாக பங்களிப்பு செய்ததாகவும் அதில் காட்டப்படவுள்ளது என்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இந்திய யூதர்கள் மைய அமைப்பின் தலைவர் நோவா மஸ்ஸில் இது குறித்துக் கூறுகையில்:"நான் இந்தியன் என்று கூறிக்கொள்வதை கௌரவமாகக் கருதி வருகிறேன், இஸ்ரேலில் எங்கு சென்றாலும் நான் இந்தியன் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன், எனது சக இஸ்ரேலியர்களிடம் நான் கூறுவதெல்லாம் இந்தியாவில் ஒரு போதும் யூதத் துவேஷம் இருந்ததில்லை என்று கூறிவந்துள்ளேன்.

ஆனால் இந்த பாலிவுட் பட விவகாரத்தினால் நான் இப்போது தலைகுனிந்து நிற்கிறேன், பாலிவுட்டின் அறியாமை குறித்து வெட்கப்படுகிறேன்.

எனக்குத் தெரிந்ததெல்லாம் ஹிட்லர் ஒரு போதும் இந்திய விடுதலையை ஆதரித்ததில்லை என்பதே. நான் பிரதமர் மன்மோகன் சிங் அல்லது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கடிதம் எழுதப்போகிறேன், பாலிவுட்டின் இந்த முயற்சியை நிறுத்தவேண்டும். ஏனெனில் இங்கு புகழ் பெற்றிருக்கும் அந்த சினிமா தொழிலுக்கு இழுக்கு செய்வதாகும்." என்றார் மஸ்ஸில்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிட்லர் பற்றிய படம்? யூதர்களிடையே அதிர்ச்சி"

கருத்துரையிடுக