பெங்களூர்:௦௦பெங்களூரில் 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான மதானிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை பெங்களூர் கோர்ட் பிறப்பித்துள்ளது.
இந்த வாரண்ட்டை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் குரிஜி பிறப்பித்துள்ளார். அவரைக் கைது செய்து ஜூன் 23ம்தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று இக்கோர்ட்டில், கூடுதல் குற்றப்பத்திரிக்கையை போலீஸார் தாக்கல் செய்தனர். அதில் 31வது குற்றவாளியாக மதானியை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லஷ்கர் இ தொய்பாவின் தென்னிந்திய கமாண்டராக வர்ணிக்கப்படும் நசீர் என்பவருடன் இணைந்து மதானி செயல்பட்டதாகவும் போலீஸாரிடம் நசீர் கொடுத்த வாக்குமூலத்தில், தான் மதானியை 2008ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி சந்தித்ததாகவும், குண்டுவெடிப்பு தொடர்பாக விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் நசீர்தான் முதன்மைக் குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: on "மதானிக்கு எதிராக பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது வாரண்ட்"
கருத்துரையிடுக