ஆந்திரப்பிரதேசத்தில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு நக்ஸல் போராளிகள் குறிவைத்துள்ளதால் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு தெலுங்கானா பகுதியில் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் அதிகரித்துள்ளது.
வட மாநிலங்களில் நக்ஸல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் தென் மாநிலங்களுக்கு ஊடுருவி வருகிறார்கள்.
இதனால் கர்நாடகம், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ஆந்திர மாநிலம் மெஹபூப் நகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் உலாவந்த நக்ஸலைட் சந்திரசேகர் பிடிபட்டார். அவரிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, நவீன செல்போன்கள், மந்திரிகளின் பாதுகாவலர்கள் அணியும் சபாரி உடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
அவருடன் போலீஸ் வேடத்தில் இருந்த 2 முக்கிய நக்ஸலைட்டுகள் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்ட நக்ஸலைட் சந்திரசேகர் கூறும் போது, "நாங்கள் தற்போது ஊழல் மந்திரிகள்- அதிகாரிகளை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளோம். இதற்காக ஒரு தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி உள்ளோம். அவர்கள் ஐதராபாத்தில் பதுங்கி உள்ளனர். மற்றொரு பிரிவினர் வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
இதையடுத்து உளவுத்துறை விடுத்த அறிவிப்பில், நக்ஸலைட்டுகள் போலீஸ், மந்திரிகளின் பாதுகாவலர்கள் வேடத்தில் வருவதால் ஆந்திர போலீசார் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.
ஊழல் புகார் கூறப்பட்ட மந்திரிகளுக்கு பாதுகாப்பு தரும் போலீசார் எந்நேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டும். அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நக்ஸலைட்டுகள் தற்போது ஊழல் மந்திரிகளை குறி வைத்திருப்பதால் அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: on "ஆந்திரா:ஊழல் மந்திரிகளுக்கு நக்ஸல்கள் குறி"
கருத்துரையிடுக