டாக்கா: 120 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான டாக்காவில் நடந்த தீவிபத்து மின்கசிவால் ஏற்பட்டது என்று அதிகாரிகள் விசாரணையின் துவக்கத்தில் கூறியிருந்தனர்.
ஒரு கெமிக்கல் சேமிப்பறைக்கு அருகில் ஒரு கல்யாணத்திற்காக சமையல் நடந்துள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட அடுப்புகளில் சமைத்துள்ளனர்.
சேமிப்பறையில் உள்ளதோ எளிதில் தீப்பிடிக்கக்கூடிய வேதியல் பொருட்கள்.
சமையல் நெருப்பு அந்த வேதியல் பொருட்களின் வெப்பத்தை அதிகமாக்கியதாலேயே தீப்பிடித்துள்ளது என்று புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறினார்.
இவ்விபத்தில் டாக்காவின் பழங்காலப் பகுதியில் பெரிய ஆறு குடியிருப்பு கட்டிடங்கள் தீயில் கருகின.
கொல்லப்பட்ட 120 பேரில் 40 பேர் கல்யாண வீட்டைச் சார்ந்தவர்கள்.
0 கருத்துகள்: on "பங்களாதேஷ் தீ விபத்து: மின் கசிவு காரணமில்லை"
கருத்துரையிடுக