23 ஜூன், 2010

நாளைய உலகின் பொருளாதார சக்தியாக ஆப்கானிஸ்தான்?

காபூல்:ஆப்கானிஸ்தான் டிரிலியன் (1 டிரிலியன்= 100 பில்லியன்) டாலருக்கு மேல் மதிப்புள்ள கனிமவளங்கள் உள்ளதாக அமெரிக்க தொல்லியல் துறையின் அறிக்கையை மேற்கோளிட்டு நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஆஃப்கன் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் இக்கண்டுபிடிப்புகள் போரினால் சிதிலமடைந்துள்ள நாட்டை மிகப் பெரும் பொருளாதார சக்தியாக மாற்றும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் நிச்சயமற்ற அரசாங்கத்தால் அமெரிக்க தலையீடுகளை மீறி ஆஃப்கனுக்கு உதவ கூடியதாக அவ்வளங்களை பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

லித்தியம், இரும்பு, தங்கம்,நியோபியம், கோபால்ட் மற்றும் இதர கனிம வளங்கள் ஆஃப்கனை ஒரு சர்வதேச புதையல் சுரங்கமாக ஆக்கிவிடும் என்று தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக லித்தியம் கிடைக்கும் நாடான பொலிவியாவில் கிடைக்கும் லித்தியத்துக்கு நிகராக ஆஃப்கனில் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய உலகில் மொபைல் போன்கள், லேப்டாப்கள் என எல்லாவற்றிலும் லித்தியத்தையே பேட்டரிக்கு பயன்படுத்துவதால் அதன் தேவை அதிகமாகவே உள்ளது. மேலும் வருங்காலத்தில் பேட்டரி மற்றும் மின்சார கார்கள், பைக்குகள் அதிகரித்தால் இதன் தேவையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

இரும்பு மற்றும் பிற உலோகங்களும் ஏராளமாக கிடைக்கின்றன. ஆனால் அமெரிக்க தலையீடு, தாலிபான்களின் தாக்குதல், உள்நாட்டு மோதல்கள், படிப்பறிவற்ற மக்கள், தொழில்நுட்ப வளர்ச்சி குறைபாடு போன்றவற்றால் இயற்கை வளங்களை பயன்படுத்தி உலகின் பொருளாதார சக்திகளுள் ஒன்றாக விளங்க ஆஃப்கன் முயற்சிக்குமா? இல்லை மேற்கண்ட காரணங்களால் எண்ணைய் உற்பத்தி அதிகமிருந்தும் அதனால் சுபிட்சி வருவதற்கு பதில் அழிவே உள்ள நைஜீரியாவை போல் மாறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நாளைய உலகின் பொருளாதார சக்தியாக ஆப்கானிஸ்தான்?"

கருத்துரையிடுக