ஸ்ரீநகர்:கடந்த ஞாயிறு அன்று ஜம்மு கஷ்மீரின் கோடை தலைநகரில் சினங்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிசூடு நடத்தியதில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார், மேலும் 30 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து ரியாஸ் பேடார் போலீஸ் தலைமை அதிகாரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். முதலமைச்சர் உமர் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் நகரில் சட்டம் ஒழுங்கை சீராக்குவதற்க்காக, பேடாருக்கு பதிலாக செய்யத் ஆஷிக் புகாரியை நியமிக்க முடிவுசெய்யப்பட்டதாக அரசாங்க செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரி உளவு- முகப்பு சேவை (Counter-intelligence) பிரிவில் தலைமை வகித்து வந்தார்.
மத்திய ரிசர்வ் போலீஸ்(CRPF) கலகக்காரர்களுக்கு எதிராக நடத்திய துப்பாக்கிசூட்டிற்கு பிறகு நகரம் முழுவதும் பரவலாக நடந்த கலவரத்தை தடுக்கும் கூட்டத்தில் மாநில போலீஸ் தலைமை அதிகாரி குல்தீப் கோடாவும் கலந்து கொண்டார்.
ஜவைத் அஹ்மத் மல்லா(26), நூர்பாக் எனும் இடத்தில் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டது, கட்டுப்படுத்த முடியாத கலவரத்தை தூண்டி, ஒட்டு மொத்த நகரையும் கொதித்தெழச் செய்தது.
நாள் முழுவதும் நடந்த பரவலான சண்டையில் 7 பாதுகாப்பு படையினர் உட்பட குறைந்தது 30 பேர் படுகாயமடைந்தனர்.
twocircles
0 கருத்துகள்: on "ஸ்ரீநகர்:போலீஸ் தலைமை அதிகாரி பதவிநீக்கம்"
கருத்துரையிடுக