இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி நிலை அறிக்கையில் அரசு ஒதுக்கும் தொகையை விட நூறு மடங்குக்கு மேல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில் கள்ளப் பணம் கைமாறுகிறது.
கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் 70,000 கோடி ரூபாய் கைமாறியுள்ளது. கணக்கில் வராத இந்தப் பணம் முழுவதும் பெரும் பெரும் பண முதலைகளின் வங்கிக் கணக்குகளில் வாகாய் தஞ்சம் புகுந்துள்ளன. வெறும் விளையாட்டுக்காக அரசின் முழு ஆதரவோடு இப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் கைமாறும் பொழுது, ஒரிசாவில் பட்டினிப் பிரதேசங்களில் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா? வெறும் 27.8 கோடி ரூபாய்!
2009 ல் நடந்த ஐ.பி.எல் போட்டிகளில் இறுதியில் விளையாடியது ஜெய்ப்பூரைப் பிரதிநிதிப்படுத்தியது ராஜஸ்தான் ராயல் டீம். ஆனால் 2010ல் ராஜஸ்தான் ராயல் டீமின் விளையாட்டு முந்தைய வருடங்களைப் போல் இல்லாமல் மிக மிக மோசமாக இருந்தது என்று ராஜஸ்தான் ராயல் டீமின் மேனஜர்கள் கூறினார்கள்.
ஆனாலும் தாங்கள் அதிக லாபத்தை ஈட்டியதாக அவர்கள் அறிவித்தார்கள். அவர்கள் ஈட்டிய லாபம் 35.1 கோடி ரூபாய்!
இந்த தனியார் கொள்ளை வியாபாரத்திற்க்காக பொது கஜானாவிலிருந்து கசிகின்ற பணமே கோடிக்கணக்கில் வரும்.
இந்தப் போட்டிகள் எப்பொழுதும் கடும் பிரகாசமான மின் விளக்குகளின் கீழேயே நடக்கின்றன. சுமார் 500 குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் உபயோகிக்கின்ற மின்சாரம் இந்த வீண் விளையாட்டுக்காக வீணடிக்கப்படுகின்றது.
ஒரு நாள் போட்டிக்காக ஐ.பி.எல். பயன்படுத்தும் மின்சாரத்தின் தொகை மட்டும் சமார் 15,000 டாலர்!
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஐ.பி.எல்:கள்ளப் பணத்தின் கூடாரம்!"
கருத்துரையிடுக