பீகார் முதல்வர் நிதிஷ்குமார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மோதலின் அடுத்தகட்டமாக, மோடி-நிதிஷ் இணைந்திருப்பது போல விளம்பரத்தை பத்திரிக்கைகளில் வெளியிட்ட சூரத் விளம்பர ஏஜென்சியில் பீகார் போலீசார் அதிரடி ரெய்ட் நடத்தினர்.
இதனால் நரேந்திர மோடி கடும் கோபமடைந்துள்ளார். நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியை உடனே முறிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்களை நெருக்க ஆரம்பித்துள்ளார்.
மேலும் பீகார் வெள்ள நிவாரண பணிகளுக்கு குஜராத் மாநில அரசு கொடுத்த ரூ.5 கோடி குறித்து பீகார் மாநில பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட்டார் மோடி. இதிலிருந்து பிரச்சனை வெடித்தது. அந்தப் பணத்தை வட்டியோடு திருப்பி அனுப்பினார் நிதிஷ்.
இந் நிலையில் பத்திரிக்கைகளில் மோடிக்காக விளம்பரம் வெளியிட்ட குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள விளம்பர ஏஜென்சியில் பீகார் போலீசார் திடீரென சோதனை நடத்தியதால் பாஜக தலைமை கடுப்பாகியுள்ளது. நரேந்திர மோடியும் இதனால் மிகவும் கோபத்தில் உள்ளார்.
ஆனாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பேர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மிஞ்சியிருக்கும் ஒரே கட்சி ஐக்கிய ஜனதா தளம் மட்டும் தான் என்பதால் அந்தக் கட்சியுடன் கூட்டணி தொடர்ந்தால் தான் தேசிய அளவில் பாஜகவுக்கு மரியாதை இருக்கும் என்று பாஜக மூத்த தலைவரான அத்வானி கருதுகிறார்.
இதனால் நிதிஷ்குமார் விஷயத்தில் அவசரப்படாமல் முடிவெடுக்குமாறு தலைவர்களுக்கு அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
இந் நிலையில் தான் மோதலை தீவிரப்படுத்தும் வகையில் சூரத் விளம்பர ஏஜென்சியான எக்ஸ்பிரசன்ஸ் நிறுவனத்தில் பீகார் போலீசார் ரெய்ட் நடத்தி, அந்த விளம்பரம் தொடர்பான ஆவணங்கள், இ-மெயில்களை கைப்பற்றினர். இந்த விளம்பரத்துக்கு பணம் தந்தது யார் என்ற விசாரணையும் நடத்தினர்.
0 கருத்துகள்: on "மோடி-நிதிஷ் இணைந்திருப்பது போல விளம்பரத்தை வெளியிட்ட குஜராத் விளம்பர ஏஜென்சியில் பீகார் போலீ்ஸ் ரெய்ட்"
கருத்துரையிடுக