24 ஜூன், 2010

நம்பமுடிகிறதா? தலிபான்களின் ஆதிக்கத்துக்கு பணிந்து அமெரிக்கா பல கோடி 'கமிஷன்'

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்க போராடி வரும் அமெரிக்கா, அந்த தலிபான்களுக்கு பல கோடி ரூபாய் ‘கமிஷன்’ தந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் போராடி, ஜனநாயக அரசை அமர்த்தப் போவதாகக கூறி அமெரிக்கா தன் ராணுவத்தை அனுப்பியது. இன்னமும் பல ஆயிரம் படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

ஆஃப்கனில், ஹமீத் கர்சாய் தலைமையில் ஜனநாயக அரசு ஏற்பட்டாலும், பல மாவட்டங்களில் இன்னும் தலிபான் ஆதிக்கம் தான். அவர்களை அடக்க அமெரிக்க படையால் முடியவில்லை.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினருக்கு உணவு முதல் ஆயுதங்கள் வரை சப்ளை செய்யும் பொறுப்பு தனியாரிடம் விடப்பட்டுள்ளது.

சப்ளை செய்யும் லாரிகள், தலிபான் ஆதிக்க பகுதிகளை கடந்து செல்லும் போது, தலிபான்களுக்கு கமிஷன் தர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இல்லாவிட்டால், சப்ளை லாரிகளை கடத்தி விடுவர். உணவு, எரிபொருள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் ஆகியவை சப்ளை செய்யும் போது ஒவ்வொரு முறையும் கமிஷன் தர வேண்டியுள்ளது. இப்படி பல கோடிகள் கைமாறி உள்ளது இப்போது தெரியவந்துள்ளது.

இது பற்றி அமெரிக்க ராணுவம் இப்போது விசாரிக்க ஆரம்பித்துள்ளது. "தலிபான்களுக்கு பணம் தராமல் சப்ளை செய்ய முடியவில்லை. பாதுகாப்புக்கு தான் நாங்கள் பணம் தந்தோம். இதில் தவறில்லை" என்று விசாரணையின் போது, கான்ட்ராக்ட் கம்பெனிகள் கூறியுள்ளன.

தலிபான்களை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் போது, அமெரிக்காவே, தலிபான்களின் ஆதிக்கத்துக்கு பணிந்து போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டு எம்.பி.,க்களிடையே பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நம்பமுடிகிறதா? தலிபான்களின் ஆதிக்கத்துக்கு பணிந்து அமெரிக்கா பல கோடி 'கமிஷன்'"

கருத்துரையிடுக