இஸ்லாமாபாத்: கூகுள், யாஹூ, ஹாட்மெயில் உள்ளிட்ட 9 இணையதளங்களுக்கு பாகிஸ்தான் கோர்ட் தடை விதித்துள்ளது.
லாகூர் உயர்நீதிமன்றத்தின் பகவல்பூர் பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தீய மற்றும் ஒழுங்கீனமான கட்டுரைகளை கொண்டுள்ளதாக கூறி கூகுள், யாகூ, எம்எஸ்என், யூ டியூப், பிங், அமேசான், ஹாட்மெயில் உள்ளிட்ட 9 இணைய தளங்களை தடை செய்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முஹம்மத் சித்திக் என்பவர் லாகூர் உயர் நீதிமன்றத்தின் பகவல்பூர் கிளையில் இது தொடர்பாக தாக்கல் செய்திருந்த மனுவில் மேற்கூறிய இணைய தளங்கள், தீய கட்டுரைகள், செய்திகள் உள்ளிட்ட உள்ளடக்கங்களை கொண்டுள்ளதாகவும், எனவே இவற்றை தடை செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இக்பால் சித்து, மேற்கூறிய இணைய தளங்களை உடனடியாக தடை செய்யுமாறு பாகிஸ்தான் தொலைதொடர்பு ஆணையத்திற்கு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் பாகிஸ்தான் தொலைதொடர்பு ஆணைய தலைவரையும் வருகிற 28 ஆம் தேதியன்று உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் இது தொடர்பாக தங்களுக்கு இதுவரை எவ்வித உத்தரவும் எழுத்துப்பூர்வமாக வரவில்லை என்றும், ஊடகங்களில் மட்டுமே இது தொடர்பான செய்தியை தாங்கள் பார்த்ததாகவும் பாகிஸ்தான் தொலைதொடர்பு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
0 கருத்துகள்: on "கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை"
கருத்துரையிடுக