புதுடெல்லி:பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த வாரம் நடைபெற்ற பி.ஜே.பி. அரசியல் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தீர்மானங்களை ‘ஒரு மூட்டை நிரம்பிய பொய்கள்’ என்று வர்ணித்துள்ளது காங்கிரஸ்.
இவ்வகையான தீர்மானங்களின் மூலம் பி.ஜே.பி தன்னுடைய ‘ஹிந்துத்துவ கொள்கைகளை’ மறைத்து முஸ்லீம்களின் ஓட்டுக்களை பறிக்க முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளது. 'எள்ளவும் உண்மையே இல்லாத தீர்மானங்களை பி.ஜே.பி தீர்மானங்களாக வெளியிட்டுள்ளது' என்று காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
பி.ஜே.பியின் தீர்மானங்கள் ‘பொய்களால் நிரம்பிய சாக்கு மூட்டை’ என்று கூறிய திவாரி, பொய்களை தீர்மானங்களாக வெளியிடுவது ஒரு தேசிய கட்சிக்கு நல்லதல்ல என்றார்.
அத்தீர்மானத்தில், காங்கிரஸ் கட்சி நாட்டின் நல்லிணக்கத்தை நம்புவதில்லை என்ற பி.ஜே.பியின் கூற்றிற்கு பதிலளித்த திவாரி, 'அப்படி என்றால் கடந்த 62 ஆண்டுகளாக ‘ஹிந்து ராஷ்டிரா’ என்ற கொள்கைகளுடன் பி.ஜே.பி செயல்படுவத்தைப் பற்றி விளக்க வேண்டும் என்றார்.
பி.ஜே.பி ஆட்சியின் போலி என்கவுண்டர்களை நியாயப்படுத்தும் அத்தீர்மானங்களை மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும் பி.ஜே.பி.யின் பாசிச முகத்தை இது கிழித்துக் காட்டுவதாக தெரிவித்தார் திவாரி.
சி.பி.ஐ.கெதிராக அவதூறுகளை பரப்பிவரும் பி.ஜே.பி.யின் நடவடிக்கையைப் பற்றி விமர்சித்த அவர், 'பி.ஜே.பி ஆட்சியில் அரசுத் துறைகள் தவறான முறையில் எப்படி உபயோகிக்கப்பட்டது என்று பி.ஜே.பி யோசித்து பார்க்க வேண்டும்' என்றார்.
சி.பி.ஐ அதிகாரிகளை தெஹெல்கா பத்திரிகையாளர்களுக்கெதிராக எப்படி பி.ஜே.பி பயன்படுத்தியது என்பதனையும் அது சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.
பி.ஜே.பி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு போதிய பணத்தை அளிப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு பதிலளித்த அவர், கடந்த 2009-2010 ஆகிய ஆண்டுகளில் சுமார் 1 லட்சத்தி 86 ஆயிரம் கோடிகளை பீகார் மாநிலம் பெற்றுள்ளதாக தெவித்த அவர், இது கடந்த என்.டி.ஏ ஆட்சியில் வழங்கப்பட்டதை விட அதிகமாகும் என்றார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் சமீபத்திய கருத்துக்களை தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் பி.ஜே.பியை சாடியுள்ளதையடுத்து, பீகாரில் பி.ஜே.பி தன் கடின காலங்களை சந்தித்து வருகிறது.
DNA
0 கருத்துகள்: on "பி.ஜே.பி.யின் பீகார் தீர்மானங்கள் ‘ஒரு மூட்டை நிரம்பிய பொய்கள்’ – காங்கிரஸ்"
கருத்துரையிடுக