லாகூர்:இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே ‘பெர்லின் சுவர்’ உள்ளதாகவும் அதனை இருநாடுகளும் அமைத்தியைக் கொண்டு தகர்க்க வேண்டும் என்றும் முன்னால் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்க் தனது சமீபத்திய கட்டுரையில் நாசுக்காக எழுதியிருந்தாலும், பாகிஸ்தானிய மக்களுக்கு வழக்கமாக வாழ்த்து வெளிடும் ஜஸ்வந்த், இம்முறை அதை தவிர்த்தது மட்டுமல்லாமல் சில சர்ச்சைகளுக்கான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதுப்பற்றி கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானிய அரசியல் நிபுணர் எஸ்.எம்.ஹாலி, இந்தியாவின் உளவுத்துறை அமைப்பான ‘ரா’வின் குழப்பவாதம் ஜஸ்வந்த் சிங்கை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானியர்களுக்கெதிராக கருத்து தெரிவிப்பது ஜஸ்வந்த்தின் அறியாமை அன்று வர்ணித்த ஹாலி, இது ‘ரா’ அதிகாரிகளின் சதிச்செயலும் கூட! என்றார்.
தாலிபான்களையும், தீவிரவாதத்தையும் பாகிஸ்தானிய அரசிற்கு ஒப்பிட்டு ஜஸ்வந்த் சிங் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் பற்றி சுட்டிக்காட்டிய அந்த நிபுணர், இக்கருத்துக்களை தெரிந்தோ தெரியாமலோ ‘ரா’ அமைப்பின் வற்புறுத்தலினால் தான் ஜஸ்வந்த் வெளிட்டுள்ளதாக சாடினார்.
முன்னதாக பாகிஸ்தானியர்களுக்கெதிராக பல சர்ச்சைகள் நிறைந்த கருத்துக்கள் ஜஸ்வந்த் சிங்க்ஹின் அக்கட்டுரையில் காணப்பட்டன.
ஏறக்குறைய பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்று ஜஸ்வந்த் அக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதத்தை தோற்கடிப்பது முக்கியமல்ல ஆனால் அதற்கு எதிராக என்ன செய்தது என்பது தான் முக்கியம். கடந்த காலங்களில் தெரியாமலேயே,என்னை நானே பாகிஸ்தானியர்களுக்கு அடகு வைத்த்விட்டதாக போன்ற கருத்துக்கள் அக்கட்டுரையில் இடம் பெற்றிருந்தன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை ‘ரா’ அமைப்பில் ஒரு முஸ்லீம்கள் கூட இடம்பெறாதது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியதும், ஜின்னாஹ்வைப் பற்றி பாராட்டி எழுதியதற்காக பி.ஜே.பியில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங்க், தற்போது அவர் பி.ஜே.பி.யில் இணைவதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானிக்கெதிராக இக்கட்டுரை வெளிவந்ததில், எதோ அரசியல் பின்னணிகளுள்ளதாக இந்திய அரசியல் நிபுணர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
DNA
0 கருத்துகள்: on "ஜஸ்வந்த்தின் கருத்துகளுக்குப் பின்னணியில் ‘ரா’வின் குழப்பவாதம் – நிபுணர்"
கருத்துரையிடுக