டெஹ்ரான்:பிரிட்டன்,பிரான்ஸ்,ஸ்வீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகள் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத கும்பல்களின் மூலமாக ஈரானில் தாக்குதல் நடத்த திட்டம்மிட்டுள்ளதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
இதுக் குறித்து, ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சகம் பிரிட்டனுக்கான தூதரக அதிகாரிகளை அழைத்து தன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஈரானிய உளவுத்துறை அமைச்சர் ஹைதர் மொச்லேஹி கூறுகையில், பிரிட்டன்,பிரான்ஸ்,ஸ்வீடன் இன்னும் மற்ற 2 ஐரோப்பிய நாடுகள் ஈரானில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
முஜாஹித்தீன் கலக் என்ற அமைப்பின் மூலம் தெஹ்ரானில் உள்ள ‘நியூ ஸ்குயர்’ என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டுகளை ஈரானிய நிபுணர்கள் செயலிழக்க செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில்,அவ்வமைப்பின் சில நபர்கள் கைது செயப்பட்டுள்ளதாவும் மொச்லேஹி தெரித்தார்.
ஆனால், பிரிட்டிஷ் வெளியுறவு அதிகாரி ஒருவர் லண்டனில் இதை மறுத்துள்ளார். "தீவிரவாதம் எங்கு நடந்தாலும், எந்த விதத்தில் நடந்தாலும் அதை நாங்கள் எதிர்க்கின்றோம்" என்றார்.
பிரிட்டிஷ் தீவிரவாதிகள் இச்சதியில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற ஈரானின் கூற்றை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
இச்செய்தி குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்த ஸ்வீடன், தற்போது இதுக் குறித்து கருத்துக் எதுவும் கூற இயலாது என்று கூறியுள்ளது. இவ்விவகாரத்தில் பிரான்ஸ் இதுவரை மெளனம் சாதித்து வருகிறது.
கடந்த ஐ.நா கூட்டத்தில், யு.எஸ்.சுடன் இணைந்து, இதே நாடுகள் தான் ஈரானிற்கு வர்த்தகத் தடைகள் போதாது என்று போர்கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது.
source:DNA
0 கருத்துகள்: on "ஐரோப்பிய நாடுகள் தீவிரவாதிகள் மூலம் ஈரானில் தாக்குதல் நடத்தத் திட்டம்- ஈரான் குற்றச்சாட்டு"
கருத்துரையிடுக