புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் யாருக்கு சொந்தமானது என்பதுக் குறித்த ஆவணங்கள் காணாமல் போன வழக்கை முடிவுக்குக் கொண்டுவர சி.பி.ஐ தீர்மானித்துள்ளது.
காணாமல் போன 23 ஆவணங்கள் அடங்கிய கோப்புகளில் 11 ஐ சி.பி.ஐ கண்டறிந்து கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள 12 ஆவணங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆதலால் இவ்வழக்கை முடிப்பதாக கூறி சி.பி.ஐ அலகபாத் உயர் நீதிமன்றத்தில் மனுவை சமர்ப்பிக்கும். அதில் கிடைக்காத ஆவணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என குறிப்பிடும் என்று கருதப்படுகிறது.
கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரலில் உத்திரபிரதேச மாநில உள்துறை அமைச்சகத்தின் வகுப்புவாத கட்டுப்பாட்டு பிரிவிலிருந்து பாப்ரி மஸ்ஜித் உரிமைத் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போயின.
பாப்ரி மஸ்ஜித் உரிமைத் தொடர்பான வழக்கில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூலையில் விசாரணை நடைபெறும் பொழுது 1949 ஆம் ஆண்டின் இதுத்தொடர்பான ஆவணக் கோப்புகளை ஆஜராக்க அலகபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுத்தொடர்பாக ஆவணங்களை சமர்ப்பிக்க அரசு தலைமைச் செயலாளர் சட்டத்துறை முதன்மை செயலாளரை தலைவராக நியமித்து ஒரு கமிட்டியை உருவாக்கியிருந்தார்.
பின்னர் 2009 ஜூலையில் பாப்ரி மஸ்ஜித் தொடர்பான 23 ஆவணங்கள் காணாமல் போனதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.முக்கியமான 7 ஆவணங்கள் காணவில்லை என முதலில் கண்டறியப்பட்டது.பின்னர் 23 ஆவணக் கோப்புகளை காணவில்லை என பின்னர் தெரிவிக்கப்பட்டது.
ஆவணக்கோப்புகள் காணாமல் போனதுத் தொடர்பாக சன்னி செண்ட்ரல் வக்ஃப்போர்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. பாப்ரி மஸ்ஜிதில் இரவோடிரவாக ரகசியமாக வைக்கப்பட்ட சிலையை மாற்றுமாறு உத்தரவிட்டு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரபிரதேச அரசுக்கு எழுதிய கடிதமும், சிலையை மாற்றுவதற்கு தன்னால் முடியாது எனக்கூறி ஃபைஸாபாத் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் கெ.கெ.நாயர் எழுதிய கடிதமும் காணாமல் போன ஆவணங்களில் அடங்கும்.
பாப்ரி மஸ்ஜிதில் சிலையை வைத்த நிகழ்வுதான் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும் வரையிலான நீண்ட சம்பவங்களுக்கு காரணமானது.
ஆவணங்கள் காணாமல் போன அந்த மாதத்தில் லிபர்ஹான் கமிஷனிடம் வாக்குமூலம் அளிக்க டெல்லிக்கு செல்லும் வழியில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட வகுப்புவாத கட்டுப்பாட்டு பிரிவின் சிறப்பு பணி அதிகாரி சுபாஷ் பான் ஸாதிடம் இந்த ஆவணங்கள் இருந்திருக்கலாம் என உத்தரபிரதேச அரசு பின்னர் விளக்கியிருந்தது.
பான் ஸாத் டெல்லிக்கு செல்லும் வழியில் ரெயிலிருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து மரணமடைந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் ஆவணங்கள் மாயம்: வழக்கை முடிவுக்குக் கொண்டுவர சி.பி.ஐ முடிவு"
கருத்துரையிடுக