'மனித உரிமை மீறல்களைக் குறித்த குற்றச்சாட்டுகளைக் குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் பொழுது பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் என்பது அரசின் கொள்கையாகும்'.
கஷ்மீரில் விவசாய விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகமான ஷெர்-இ-கஷ்மீரில் நடந்த பட்டமளிப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தும்பொழுது பிரதமர் இதனை தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 அப்பாவி கஷ்மீர் இளைஞர்களை ராணுவம் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
'பொதுமக்களின் வாழ்க்கை வெற்றிக்காக அவர்களை பலப்படுத்த எவ்வித அரசியல் செயல்திட்டமும் தேவையில்லை என்ற நிலைப்பாடுதான் சிலரிடம் உள்ளது' என மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டினார்.
'இது கஷ்மீர் பள்ளத்தாக்கில் பொதுமக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அவ்வாறான சூழல்களில் நமது ராணுவம் நடவடிக்கை எடுக்க தூண்டப்படுகிறது. ஆனால் அதன்பெயரில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
பேச்சு வார்த்தைக்கு அரசு தயார்நிலையில் உள்ளது. தீவிரவாதத்தையும், தாக்குதலையும் எதிர்க்கும் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்'. இவ்வாறு மன்மோகன் சிங் உரை நிகழ்த்தினார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கஷ்மீருக்கு பிரதமர் மன்மோகன்சிங் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கஷ்மீர்:மனித உரிமை மீறல்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும்- பிரதமர் மன்மோகன் சிங்"
கருத்துரையிடுக