3 ஜூன், 2010

இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நெற்றியில் சுட்டுக் கொன்றனர்: துயர்துடைப்பு குழுவில் இருந்த பாகிஸ்தான் நிரூபர்

இஸ்லாமாபாத்:காஸ்ஸா சென்ற நிவாரண கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதில் சுமார் 19 பேர் உயிரிழந்தனர். பின்னர் அக்கப்பல் இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டு, உயிர் தப்பிய சுமார் 6௦௦க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செயப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை சுமார் 124 அமைதிப் பணியாளர்களை இஸ்ரேல் விடுவித்தது. அவர்கள் அனைவரும் ஜோர்டான் வந்தடைந்தனர்.

தலாத் ஹுசைன் என்ற பாகிஸ்தானிய நிருபர் கூறுகையில், "இஸ்ரேலிய கமாண்டோக்கள் நிவாரண கப்பலில் அத்துமீறி நுழைந்ததுமில்லாமல் அமைதிப் போராளிகளை நேற்றில் வேண்டுமென்றே சுட்டனர்." என்றார்.

அவர் மேலும் கூறியதாவது,"இஸ்ரேலியக் கமாண்டோக்கள் வேண்டுமென்றே நெற்றியில் சுட்டதை நான் என் கண்ணால் பார்த்தேன். எங்களிடம் துப்பாக்கியோ அல்லது ஆயுதமோ கப்பலில் இருந்ததில்லை. அதை அறிந்த பிறகும், 4 பேர் நெற்றியில் சுடப்பட்டு கொல்லப்பட்டனர்" என்றார்.

அவர்கள் என் கண் முன்னாள் செத்து மடிவதை கண்கூடாகப் பார்த்தேன் என்றார் தலாத்.

கப்பலில் நுழைவதிலிருந்து வெளியேறும் வரை இஸ்ரேலியக் கமாண்டோக்கள் என்னென்ன அத்து மீறல்களை செய்தனவோ, அதை நான் படம் பிடித்துள்ளேன் என்றும் சரியான நேரத்தில் நான் அதை வெளியிட உள்ளேன் என்றும் தலாத் மேலும் குறிப்பிட்டார்.

தலாத் ஹுசைன் ஒரு பாகிஸ்தானிய தொலைக்காட்சியின் உரிமையாளர் ஆவர். தன் பாகிஸ்தானிய கேமராமேனுடன் தலாத் காஸ்ஸா சென்றுள்ளார். இஸ்ரேலின் அட்டூழியத்தை பாகிஸ்தானும் முன்பு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நெற்றியில் சுட்டுக் கொன்றனர்: துயர்துடைப்பு குழுவில் இருந்த பாகிஸ்தான் நிரூபர்"

கருத்துரையிடுக