3 ஜூன், 2010

இந்தியாவை உதாரணம் காட்டும் இஸ்ரேல்

இஸ்ரேல் இந்தியாவையும் பாகிஸ்தானையும் இக்கப்பல் தாக்குதல் விவகாரத்தில் இழுதுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த வாரம் மட்டும் இந்தியா, பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், ஏமன் என எல்லா நாடுகளிலும் சுமார் 50௦க்கும் மேற்பட்டோர் குண்டுவெடிப்பு, தாக்குதலால் இறந்துள்ளதாகவும், இவ்விகாரத்தில் தன் கண்ணைக் கட்டிக் கொண்டு குருடாக நடிக்கும் ஐ.நா செயலகம் இஸ்ரேலின் விவகாரத்தில் மட்டும் ஏன் மூக்கை நுழைத்து கண்டன அறிக்கைகளும், தீர்மானங்களும் வெளியிடுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நிவாரணக் கப்பல் தாக்குதல் விவகாரத்தில்,இஸ்ரேலின் அட்டூழியத்தை இந்தியாவும் சத்தமில்லாமல் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுடன் நட்பு பாராட்டி பல திசைகளில் இந்தியா உறவுகளை மேற்கொண்டுள்ள நிலையிலும்,புனே குண்டுவெடிப்பிற்கு பிறகு எந்த அசம்பாவிதமும் இந்தியாவில் நடக்காமல் இருந்த நிலையில் இஸ்ரேலின் இந்த அறிக்கை நம் தலைவர்களின் மூளைக்கு வேலை கொடுத்துதுள்ளது என்றால் அது மிகையாகாது.

இந்தியா இதிலிருந்தாவது பாடம் பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
source:Twocircles

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியாவை உதாரணம் காட்டும் இஸ்ரேல்"

கருத்துரையிடுக