3 ஜூன், 2010

சிறைமாற்றம்:அரசிடம் கோரிக்கை வைக்க அஃப்சல் குருவுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை

புதுடெல்லி:திஹார் சிறையிலிருந்து கஷ்மீர் சிறைக்கு மாற்றும் விவகாரத்தில் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது எனவும், அரசிடம்தான் கோரவேண்டும் எனவும் அஃப்சல் குருவுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரைக் கூறியுள்ளது.

தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை தனது குடும்பத்தினர் சந்திப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீநகர் சிறைக்கு மாற்றவேண்டும் என்று பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அநியாயமாக குற்றஞ்சாட்டி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடும் அஃப்சல் குரு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதற்கு அளித்த பதிலில்தான் சுப்ரீம் கோர்ட் தனது உதவிச் செய்ய முடியாத நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

அஃப்ஸல் குருவின் மரணத்தண்டனையை சுப்ரீம் கோர்ட் ஒப்புக்கொண்ட பிறகு தாக்கல் செய்யப்பட்ட தவறுகளை திருத்துதல் தொடர்பான மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடிச் செய்ததுடன் இனி அஃப்சல் குரு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சுப்ரீம் கோர்ட்டின் வரம்பிற்கு உட்படாது எனவும் அறிவித்துள்ளது.

எந்த சிறையில் அடைக்கவேண்டும், கருணை மனுவில் என்ன தீர்மானம் எடுக்கவேண்டும் ஆகிய விஷயங்களையெல்லாம் இனிமேல் தீர்மானிப்பது அரசாகும் என்று அஃப்சல் குருவிற்கு அளித்த பதிலில் சுப்ரீம் கோர்ட் கூறுகிறது.

பாராளுமன்றத்தாக்குதல் வழக்கில் 2002 டிசம்பர் 18 ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் அஃப்சல் குருவிற்கு மரணத்தண்டனை விதித்தது. அன்று முதல் அஃப்சல் குரு திஹார் சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2003 ஆம் ஆண்டு அக்டோபர் 29 இல் டெல்லி உயர்நீதிமன்றமும், 2005 ஆகஸ்ட் நான்கில் உச்சநீதிமன்றமும் அஃப்சல் குருவிற்கு விதிக்கப்பட்ட மரணத்தண்டனை ஒப்புக் கொண்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சிறைமாற்றம்:அரசிடம் கோரிக்கை வைக்க அஃப்சல் குருவுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை"

கருத்துரையிடுக