பெங்களூரூ:மணிப்பூர் மாநிலத்தில் நாகா ஆயுத போராட்டக் குழு அழைப்பு விடுத்துள்ள சாலை போக்குவரத்துத் தடை போராட்டத்தினால் அத்தியாவசிய தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் அல்லல்பட்டு வரும் மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசு போர் கால அடிப்படையில் விரைந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும், என பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொது செயலாளர் கே.எஸ்.ஷரீப் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளார்.
மேலும் மணிப்பூர் மாநிலத்திற்கு மத்திய அரசு தனது கடமையை உணர்ந்து விரைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் . மணிப்பூரின் சாலைகள் பல நாட்களாக நாகா குழுவால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையால் மக்கள் தாம் உயிர் வாழத் தேவையான அத்தியாவசிய தேவையைக் கூட நிறைவேற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.
ஏற்கனவே ராணுவத்திற்கும் ஆயுத குழுவிற்குமிடையே சிக்கி அல்லல்பட்டுவரும் மணிப்பூர் மக்களின் வாழ்ககை இப்போரட்டத்தால் மேலும் மோசமடைந்து வருகின்றது என மத்திய அரசுக்கு நினைவூட்டியுள்ளார்.
மேலும் பேச்சுவார்த்தைக்கு மறுத்து வருகின்ற ஆயுத போராட்டக் குழுவின் இது போன்ற அத்துமீறல் போரட்டங்களிலிருந்து மணிப்பூர் மக்களினை பாதுகாப்பது மத்திய அரசின் கடமை என கூறியுள்ளார்.
twocircles
0 கருத்துகள்: on "நாகா குழுவால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க மத்திய அரசுக்கு பி.எப்.ஐ. வலியுறுத்தல்"
கருத்துரையிடுக