சென்னை:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி சிறையில் 7 ஆண்டு காலத்தைக் கழித்த கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 500 பேர் விடுவிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
அண்ணா பிறந்த நாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின்போது கைதிகளை விடுவிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் தற்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ளதையடுத்து 7 ஆண்டு சிறைவாசத்தை முடித்த, நன்னடத்தையுடன் கூடிய கைதிகளை விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பான கணக்கெடுப்பு சமீபத்தில் ரகசியமான முறையில் சிறைகளில் நடத்தப்பட்டது. இதில் 7 முதல் 10 வருடம் வரை சிறைக்காலத்தை முடித்த, நன்னடத்தையுடன் கூடிய கைதிகள் 500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை விடுதலை செய்யும் உத்தரவு மாநாட்டுக்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
thatstamil
0 கருத்துகள்: on "செம்மொழி மாநாட்டையொட்டி 7 ஆண்டுகளைக் கழித்த 500 கைதிகள் விடுதலை"
கருத்துரையிடுக