மும்பை:கடந்த 2009ல் மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள சங்கலி என்ற நகரத்தில் நடந்த மதக்கலவர வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ‘பில்’ மனுவை, கடந்த வாரம் விசாரித்த மும்பை நீதிமன்றம், போலீஸ் விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு மும்பை சூப்பர் இன்டேன்தேன்டிற்கு உத்தரவு பிறப்பித்தது.
கலவரத்திற்கான காரணங்களையும் சமர்பிக்குமாறு நீதிபதிகள் ஜே.என்.படேல் மற்றும் எஸ்.சி.தர்மதிகாரி அடங்கிய பென்ச் ஆணையிட்டுள்ளது.
2009 செப்டம்பர் மாதம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, அப்சல் கஹானை சிவாஜி கொள்வது போன்ற நாடகங்கள் அரங்கேரியத்தை தொடர்ந்து, சங்கலி மற்றும் மிராஜ் ஆகிய நகரங்களில் மதக் கலவரங்கள் வெடித்தன.
மதக் கலவர தடுப்புக் கமிட்டி மற்றும் இவ்வழக்கின் மனுதாரருமான சமித் கதீம் தன் மனுவில் கூறியுள்ளதாவது, 'அக்டோபர் 2009ல் நடக்கவிருந்த தேர்தல்களை கணக்கில் கொண்டுதான் இக்கலவரங்கள் நடத்தப்பட்டாக' தெரிவித்துள்ளார்.
இக்கலவரம் தொடர்பாக சுமார் ‘131’ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறும் அந்த ‘பில்’ மனு, இவ்வழக்குகளில் போலீஸ் விசாரணை மிகவும் தாமதமாக நடந்து கொண்டிருப்பதால், இவ்வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
4 வாரத்திற்குள் இவ்வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும் படி நீதிமன்றம் மும்பை போலீஸிற்கு உத்தரவிட்டுள்ளது.
Mumbaimirror
0 கருத்துகள்: on "சங்கலி கலவரம்:விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு மும்பை போலீஸிற்கு நீதிமன்றம் உத்தரவு"
கருத்துரையிடுக