லக்னோ:முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு என்பது ஒரு தேவையற்ற விஷயம் என்று அனைத்திந்திய முஸ்லீம்கள் சட்டவாரியத் துணைத் தலைவரும், ஷியா உலமாவுமான மௌலான கல்பே சாதிக், பாரா பங்கி என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீட்டை வைத்து நாம் ஒரு போதும் முன்னேற முடியாது. நமக்கு நவீன கல்வி தான் தேவை என்று மேலும் தெரிவித்தார்.
முன்னதாக பல சர்ச்சைகளுக்கு ஆளான இவ்வுலமா, முஸ்லீம்கள் குடும்ப கட்டுபாட்டை கட்டாயப்படுத்த வேண்டும் என்று கோரியவர். பிறையை பார்த்து ஈத் தினங்களை தீர்மானிப்பதை விட்டுவிட்டு, நாள்காட்டியின் படி பெருநாள்களை தீர்மானிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர்.
முஸ்லீம்களின் பிற்போக்குத் தன்மைக்கும், படிப்பறிவில்லாமைக்கும் முஸ்லீம் தலைமை தான் காரணம் என்று குற்றம் சாட்டிய அந்த அறிஞர், இன்றைய கால மக்களுக்காவது படிப்பில் முன்னேற வழிகாட்ட அவர்கள் முன்வருவதின் மூலம், தங்களின் பாவத்திற்கு பரிகாரமாய் அமையும் என்றார்.
அதை விட்டுவிட்டு இடஒதுக்கீடு போன்ற விசயங்களில் மூக்கை நுழைத்து நேரத்தை வீண் அடிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஷியா அறிஞரின் இப்பேச்சு,பரபரப்பையும், கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. source:Times of India
0 கருத்துகள்: on "முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை! - ஷியா மர்ர்க்க அறிஞர்"
கருத்துரையிடுக