17 ஜூன், 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு: தர்காவிற்கு வந்த சலீமை தற்கொலைப்படை தீவிரவாதி என்று சித்தரித்த ராஜஸ்தான் ஏ.டி.எஸ்

அஜ்மீர்:2001 அக்டோபர் 11 அன்று ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு பிறகு மற்றவர்கள் போல் சையத் சலீம் அஜ்மீர் தர்காவிற்கு சென்றுள்ளார். அங்கு குண்டு வெடிக்கும்! தான் தற்கொலைப் படை தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவேன் என்று அவர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.
ஆம்! ராஜாஸ்தான் போலீசின் ஒரு மோசமான பொறுப்பற்ற விசாரணை, அவர்களின் குடும்பத்தினருக்கும், அன்ப, நண்பர்களுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,இப்போது ராஜஸ்தான் போலீஸ் ஒத்துக்கொள்கிறது, சலீமும் தர்காவிற்கு வருகை புரிந்த ஒரு சாதாரன முஸ்லீம் மாறாக தற்கொலைப்படை தீவிரவாதி அல்ல என்று! இந்த அவலங்களை சந்திப்பதற்கு சலீம் உயிரோடு இல்லையென்றாலும், அவரின் குடும்பத்தினர் சுமக்காத வலி இல்லை! வேதனை இல்லை!

தற்போது சி.பி.ஐ. மேற்கொண்ட நீதி விசாரணைக்கு பிறகுதான், சலீம் என்ற மற்றொரு முஸ்லீம் பலிகடவாக்கப்பட்டுள்ளது அம்பலமானது.

இந்த குண்டுவெடிப்புகளை ஹிந்துத்வா தீவிரவாதிகள் தான் அரங்கேற்றியது என்றும் நிருபனமானது.

இது குறித்து, சலீமின் மனைவி மற்றும் இரு குழந்தைகள் பேட்டி அளிக்க மறுத்த நிலையில்,அவரின் மற்றொரு உறவினர் குறிப்பிடுகையில், இவ்விரண்டாண்டுகளில் ராஜஸ்தான் போலீஸ் இரவு பகல் பாராமல் சலீமின் வீட்டிற்கு வந்து அத்துமீறி நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தர்காவின் இணக்கத்தை பெறுவதற்காக சலீம் தினமும் அஜ்மீர் சென்று வேலை பார்த்து வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

மற்றொரு உறவினர் கூறுகையில், "நாங்கள் மக்கள் முன்னோ அல்லது பொது இடங்களுக்கோ! சுதந்திரமாக நடமாட முடிவதில்லை என்றும், தீவிரவாதிகள் என்று நாங்கள் முத்திரை குத்தப்பட்டதனால்,அதன் விளைவுகளை நாங்கள் சுவைத்து பார்த்து விட்டோம்" என்று தெரிவித்தார்.

சம்பவ தினத்தன்று சலீமின் பாக்கெட்டில் இருந்த 'தெலுங்கு நியுஸ்பேப்பர்' தான் அவரை ‘ஹைதரபாதி’ என்று காட்டி கொடுத்ததாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சலீம் பாக்கெட்டில் 'ஹைதரபாத்' அடையாள அட்டை இருந்ததாலும், சம்பவத்திற்கு சில நாட்களிற்கு முன்பு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித்திலும் குண்டு வெடித்ததினால், சலீம் இவ்வழக்கில் பிண்ணப்பட்டார்.

சமூக ஒற்றுமையை சீர்குலைக்க வந்த வங்கதேசிய (ஹர்கதில் ஜிஹாதி) தீவிரவாதி என்றெல்லாம் போலிசின் கற்பனை கடல்தாண்டி பாய்ந்துள்ளது.

சலீமின் நண்பர் பாரூக் தெரிவித்ததாவது, சலீம் ஒரு சாதுவான இறைபக்தியுள்ள மனிதராக இருந்தார் என்றும் அவர் இப்படியொன்றை செய்திருக்கவே மாட்டார் என்று தாங்கள் நம்பியதாக தெரிவித்தார்.

அஜ்மீர் தர்காவில் சலீம் அதிக நேரத்தை கழிப்பது வாடிக்கைத்தான் என்று கூறிய பாரூக், இப்படிப்பட்ட அவர் எதற்காக அங்கு குண்டு வைக்கவோ அல்லது வெடிக்கவோ செய்திருக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

அஜ்மீர் தர்காவிற்கு அருகில் ஒரு கடை திறப்பத்தின் மூலம், தர்காவிற்கு அடிக்கடி சென்று வரலாம் என்ற கனவே சலீம் மனதில் பதிந்திருந்ததாக பாரூக் தெரிவித்தார்.

சலீமின் மரணச் செய்தியைக் கூட தாங்கமுடியாத அவரின் குடும்பம், இத்துவேஷங்களை எப்படி சுமந்திருக்கும் என்று நினைத்தால் நடுநிலையாளர்கள் ரத்தக்கண்ணீர் விடுவர்.
source: Siasat

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு: தர்காவிற்கு வந்த சலீமை தற்கொலைப்படை தீவிரவாதி என்று சித்தரித்த ராஜஸ்தான் ஏ.டி.எஸ்"

கருத்துரையிடுக