"புதிய மையங்களை விரிவாக்கம் செய்யும் முயற்சி எனக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. நான் அதற்கான பணிகளை துரிதப் படுத்தினேன். இதன் மூலம் பின்தங்கி உள்ள முஸ்லிம் சமூக மக்கள் தங்கள் உயர் கல்விக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்." என்று பேராசிரியர் அஜிஸ் கூறினார்.
"சிறப்பு மையங்களை விரிவாக்கம் செய்யும் முடிவு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது அது தொலைதூர பயன்களை கொண்டுள்ளது.
2020ல் AMU நூற்றாண்டு நிகழ்சிகளை கொண்டாடும் போது இந்த சிறப்பு மையங்கள் ஒவ்வொன்றும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்யும் ஒரு பல்கலைகழகமாக செயல்படும். அறிவுத்திறனை சக்திபடுத்தக் கூடிய மிகப்பெரிய பயன்கள் பிற்காலத்தில் ஏற்படும்.
AMU-வின் விரிவாக்க மையங்கள் சட்டப் பூர்வமானவை இந்திய பிரதமர் மற்றும் பார்வையார்கள் மூலம் இதற்கு ஏற்கனவே ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு முதல் முறையாக இம்மையங்களுக்காக சிறப்பு திட்டங்களை தந்துள்ளது. இதைப் பற்றிய மாற்று கருத்துடைய மக்கள் அனைவரும் என் மூலமாகவோ அல்லது பதிவாளரையோ அணுகி தெளிவான விளக்கத்தை கேட்டுக் கொள்ளலாம்". என்று கூறினார்.
பல்கலைக்கழக பதிவாளர் V.K அப்துல் ஜலீல் கடந்த மூன்று வருடங்களில் இம்மையங்கள் செய்த பணிகளின் வளர்ச்சி பற்றி கூறினார்.
"ஓய்வு பெற்ற பணியாளாகளுக்கு மருத்துவ சேவைகள், 250 தினசரி ஊதிய பணியாளர்கள், 38 தினசரி ஊதிய எழுத்தர் பணியாளர்கள், பள்ளிகூடங்கள் விரிவாக்கம், 434 ஆசிரியர்கள் 117 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோர் ஆணையம் மூலம் பதவி வாய்புகள் பெற்றுள்ளனர்.
உலகளவில் முதன்மையான 22 பல்கலைகழகங்களுடன் தகவல் அறியும் உரிமையின் ........அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
TCN
0 கருத்துகள்: on "AMU- (அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தின்) மையங்கள் சட்டப் பூர்வமானது பேராசிரியர் அஜீஸ்"
கருத்துரையிடுக