17 ஜூன், 2010

பாகிஸ்தானை அழிக்க அந்நிய சக்திகள் சதி: பாக்., உள்துறை அமைச்சர்

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானை அழிக்க,அதற்காக உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த கராச்சி நகரில் திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தி வரும் வெளிநாட்டு சக்திகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கு போதுமான ஆதாரமும் நம்மிடம் உள்ளன என பாக் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ள பதிலில் இந்த வெளிநாட்டு சக்திகளுக்கு உள்நாட்டில் இருந்து செயல்படக்கூடிய ஒரு சில சக்திகளும் உதவி புரிந்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.

எங்கெல்லாம் உள்நாட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கபடுகின்றதோ சட்ட ஒழுங்கு சீர்கெடுகின்றதோ அரசு எந்திரம் முடக்கபடுகின்றதோ அங்கெல்லாம் அரசு இரும்புக்கரம் கொண்டு பயங்கரவாத சக்திகளை ஒடுக்கிடும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த வன்முறை சம்பவத்தில் ஷியாக்களோ சன்னிக்களோ ஈடுபடவில்லை மாறாக வெளிநாட்டு நிதி உதவியுடன் செயல்படும் மூன்றாவது சக்திதான் இப்பிரிவினை வாத சதிச் செயலை செயல்படுத்துகின்றது. இவர்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம் என ஆன்லைன் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதனிடையே கராச்சியில் ஏற்பட்டுள்ள இந்த திட்டமிட்ட படுகொலை தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காவல்துறை வட்டார செய்தி குறிப்பின்படி துணை சிறை காப்பாளர் இஷாம் மியோ ஓர் ஆயுதம் ஏந்திய மர்ம நபரால் சுடப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என ஜியோ செய்தி நிறுவனம் செவ்வாய் அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளது.

செவ்வாய் காலை வரை மூன்று நபர்கள் காயம் அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இத்திட்டமிட்ட படுகொலை நஜிமாபாத் ஆண்கள் கல்லூரியின் அருகில் உள்ள மூசா காலனியில் மூன்று நபர்கள் கொல்லப்பட்டதுடன் துவங்கியது.

கடந்த மாதம் மூன்று நாட்கள் தொடர்ந்து நிகழ்ந்த அரசியல் மோதல் படுகொலையில் 37 நபர்களின் உயிர் பலிகடாவாக்கப்பட்டுள்ளது எட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இவ்வன்முறை சம்பவம் முத்தஹிதா குவாமி இயக்கம்(MQM), அவாமி தேசிய கட்சி(ANP), முஜாஹிர் குவாமி இயக்கம்- பாகிஸ்தான்(MQMP) , ஜமாத்தே இஸ்லாமி(JI) ஆகிய இயக்கத்தினரை குறிவைத்து நடைபெற்றுள்ளது.

MQM சிந்து மாகாணம் மற்றும் பாக்.,கின் மத்திய அரசின் முக்கிய கூட்டணி கட்சியாகும். ANPயும் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) தலைமையிலான அரசில் முக்கிய அங்கங்களாகும். இவ்விரு கட்சிகளும் கூட்டணி அரசில் இடம்பெற்று இருந்தபோதிலும் கூட தனது இன மக்களின் உரிமைக்காக தொடர்ந்து மத்திய அரசிற்க்கு சங்கடத்தை உண்டாக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

முஜாஹிர்கள் இந்திய - பாக் பிரிவினையின் போது இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள். புஷ்தூன் என்பவர்கள் கராச்சியின் பூர்வீக குடிகளாவர்.
source:twocircles

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தானை அழிக்க அந்நிய சக்திகள் சதி: பாக்., உள்துறை அமைச்சர்"

கருத்துரையிடுக