துபாய்:உலகக்கோப்பை கால் பந்தாட்டத்தை வெறி கொண்டு பார்ப்பதால் வேலை, திருமணம், ஆன்மீக வாழ்க்கை எல்லாம் பாதிக்கப்படலாம் என்று மார்க்க அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
துபாயில் ஒரு கருத்தரங்கில் பேசிய மார்க்க அறிஞர்கள் "இது சமூகத்திற்க்கு நல்லதல்ல ரசிகர்களிடம் இது பிளவை ஏற்படுத்துகிறது" என்று கூறினர்.
இஸ்லாமிய விவகாரம் மற்றும் அறநிலையத்துறை (Department of Islamic Affairs and Charitable Activities ) இது சம்பந்தமாக நேற்று (22/06/2010) கருத்து தெரிவித்தது.
விளையாட்டின் நல்ல அம்சங்களைப் பயன்படுத்துவது, ஊழல் இனவாதம் போன்ற தீயவைகளைத் தடுப்பது ஆகியவைகள் குறித்து அது கலந்தாய்வு செய்தது.
"விளையாட்டு வீரர்களைப் போற்றி வணங்குவது மிகப்பெரிய தவறாகும். கால் பந்தாட்டத்தின் மேலுள்ள வெறி திருமண உறவுகளை பாதிக்கலாம் அது விவாகரத்து வரை கூட செல்லலாம்" என்று நேற்று அது வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
7days
0 கருத்துகள்: on "கால் பந்தாட்டம் காண்பதில் எச்சரிக்கை: மார்க்க அறிஞர்கள்"
கருத்துரையிடுக