சக சிறைவாசியோடு ஏற்பட்ட தகராறில் அவனை கத்திரியால் குத்திக் குதறி பையால் முச்சுத் திணற வைத்துக் கொன்று பின்னர் சாவகாசமாக நுரையீரலை வெட்டித் தின்றுயிருக்கிறான் ஒரு காதகன்.
இது நடந்தது ஃபிரான்சில். 39 வயது நிரம்பிய நிக்கோலாஸ் கொக்கெய்ன் பாதி நுரையீரலை அப்படியே பச்சையாகத் தின்றிருக்கிறான்.மீதியை வெங்காயத்தை வெட்டி போட்டு சிறையிலையே உண்டாக்கிய அடுப்பில் வைத்து பொரித்து சாப்பிட்டிருக்கிறான்.
கொல்லப்பட்ட பரிதாபத்திற்க்குரிய சிறைவாசியின் பெயர் தியர்ரி பவுத்ரி.
விலா எலும்பை வெட்டி எடுத்து, இதயம் என்று நினைத்து நுரையீரலை வெட்டியிருக்கிறான் நிக்கோலாஸ் கொக்கெய்ன்.
அந்தச் சிறை அறையில் 3 பேர் அடைக்கபட்டிருந்தனர். நிக்கோலாஸ் கழிவறையில் தாள்களைப் போட்டு அடைப்பை உண்டாக்கியதால் அவனுக்கும், தியரிக்கும் தகராறு உண்டானது. நிக்கோலாஸ் மனநிலை சரியில்லாதவன்.
7days
0 கருத்துகள்: on "சக சிறைவாசியின் நுரையீரலைத் தின்ற சைக்கோ!"
கருத்துரையிடுக