அஹ்மதாபாத்:2002 குஜராத் இனப் படுகொலை வழக்கில், ஜூன் 29-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பாபு பஜ்ரங்கிக்கு சிறப்பு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடும் ஆர்.ஏ.ஷேய்க் என்ற வக்கீலை "எனக்கு எதிராக வாதித்தால் தகுந்த பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று பஜ்ரங்கி மிரட்டியுள்ளார். நீதிமன்றத்தின் நுழைவு வாயிலில் வைத்து பஜ்ரங்கி ஷேய்க்கை மிரட்டியதாக மற்றொரு வக்கீலான எஸ்.எம்.வோராவும் நீதிமன்றத்தில் உறுதிசெய்தார்.
இக்கருத்துகளை வழக்கின் ஆவணங்களுடன் பதித்த நீதிபதி ஜ்யோட்சனா யாக்னிக், வரும் 29ம் தேதிக்குள் இதுபற்றி பதிலளிக்குமாறு பஜ்ரங்கிக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, "பாதிக்கப்பட்டவர்களையோ, புகார் அளித்தவர்களையோ அல்லது அவர்களுக்காக வாதாடும் வக்கீல்களையோ எக்காரணத்தை கொண்டும் நான் மிரட்ட மாட்டேன்" என்று பஜ்ரங்கி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 28, 2002 அன்று நரோடா பாடியா மற்றும் நரோடா காம் ஆகிய இடங்களில் நடந்த கலவரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். சொத்துக்களும் அழிக்கப்பட்டது.
இக்கலவரத்தின் சதி தீட்டியது உட்பட அனைத்து வகையிலும் பஜ்ரங்தள் தலைவனான பாபு பஜ்ரங்கி ஒரு முக்கிய குற்றவாளி ஆவான்.
source:TwoCircles.net
0 கருத்துகள்: on "குஜராத் இனப் படுகொலை வழக்கு: பாபு பஜ்ரங்கிக்கு நீதிமன்றம் கெடு"
கருத்துரையிடுக