ஐ.நா:காஸ்ஸாவிற்கு சென்ற நிவாரணக் கப்பல்களை தாக்கி சமாதான பணியாளர்களை கொலைச் செய்த இஸ்ரேலின் கொடூர நடவடிக்கையை ஐ.நா கடுமையாக கண்டித்தது.
சம்பவத்தைக் குறித்து சுதந்திரமான பாரபட்சமில்லாத உண்மையான விசாரணையை மேற்கொள்ளவும், இஸ்ரேல் கைது செய்துள்ள சமாதான பணியாளர்களை விடுதலைச் செய்து, கைப்பற்றிய கப்பல்களை உடனடியாக விடுவிக்கவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கோருகிறது.
10 மணிநேர நீண்ட விவாதத்திற்கு பிறகு சமாதான பணியாளர்களின் மரணத்திற்கு காரணமான செயல்பாடுகளை கண்டிப்பதாக பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியது.
துருக்கி தயாராக்கிய அறிக்கையை அமெரிக்காவின் தலையீட்டின் காரணமாக பல திருத்தங்களுக்கு உட்பட்ட பிறகே பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியது. இஸ்ரேலின் பெயரை வெளிப்படையாக எடுத்துக்கூறி விமர்சித்து சர்வதேச விசாரணையை கோருவதாகயிருந்தது துருக்கி தயாராக்கிய அறிக்கை.
காஸ்ஸாவிற்கெதிராக இஸ்ரேல் ஏற்படுத்திய தடையை வாபஸ் பெறவேண்டுமென்று பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களான பிரிட்டன், ரஷ்யா, பிரான்சு, சீனா ஆகிய நாடுகள் விவாதத்தில் கோரின. ஆனால் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும், மத்திய கிழக்கு பகுதியில் சமாதான முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் எனவும் இஸ்ரேல் பதிலளித்துள்ளது.
இஸ்ரேல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்திற்கு இரட்டை நிலை உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தர் லிபர்மன் தெரிவிக்கிறார்.
இதற்கிடையே காஸ்ஸாவிற்கு சென்றுக் கொண்டிருந்த நிவாரண கப்பலை இஸ்ரேல் தாக்கி சமாதானப் பணியாளர்களைக் கொலைச் செய்த சூழலில் காஸ்ஸாவின் ரஃபா எல்லையை திறக்க எகிப்து முடிவுச்செய்துள்ளது.
கால நிர்ணயம் இல்லாமல் எல்லை திறக்கப்படுவதாக எகிப்தின் பாதுகாப்பு அதிகாரி அறிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்ரேல் தாக்குதல்:விசாரணைக்கு ஐ.நா உத்தரவு"
கருத்துரையிடுக