1 ஜூன், 2010

கஷ்மீர்:எதிர்காலத்தைக் குறித்து கஷ்மீரிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு

புதுடெல்லி:பத்தில் நான்கு கஷ்மீரிகள் சுதந்திரத்தை விரும்பினாலும், மாநிலத்தின் எதிர்காலத்தைக் குறித்து வலுவான கருத்து வேறுபாடு நிலவுவதாக பிரிட்டீஷ் அகாடமியின் ரோபர்ட் ப்ராட்நோக் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

பிரச்சனைக்கு எளிதான தீர்வுகள் இல்லையென்று அவர் தெரிவிக்கிறார். ஆனால், சமாதானத்திற்கான காரணிகள் தற்பொழுதும் உண்டு. குறிப்பாக சுதந்திரமாக நடமாடும் விதத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை திறந்துவிடுவதற்கு கஷ்மீரிகளுக்கு மத்தியில் வலுவான ஆதரவு உண்டு.

பாகிஸ்தானின் வசமிருக்கும் கஷ்மீரில் 44 சதவீதம் பேர் சுதந்திரத்தை ஆதரிக்கின்றனர். இந்தியா வசமிருக்கும் கஷ்மீரிலோ 43 சதவீதம் பேர் சுதந்திரத்தை ஆதரித்துள்ளனர். கஷ்மீர் பள்ளத்தாக்கில் 74 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை சுதந்திர நாடாக மாறுவதை ஆதரிக்கும்பொழுது ஜம்முவில் ஒரு சதவீதத்திற்கு கீழே உள்ளவர்கள் மட்டுமே சுதந்திரத்தை ஆதரிக்கின்றனர்.

ஆனால் பாகிஸ்தானுடன் சேர 2சதவீதம் மட்டுமே ஆதரவு தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் வசமிருக்கும் கஷ்மீரில் இது 1 சதவீதம் மட்டுமே.

சர்வதேச விவகாரங்களில் சுதந்திரமாக ஆய்வை மேற்கொண்டுவரும் சாத்தம் ஹவுஸ்தான் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது.

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டின் இரு புறங்களிலும் நடத்தும் முதல் ஆய்வாகும் இது. 1948 ஆம் ஆண்டு ஐ.நா உத்தரவிட்ட அபிப்ராய வாக்கெடுப்பு தற்போதைய சூழலில் பிரச்சனைகளை தீர்க்க உதவிகரமாக இருக்காது என சர்வே தெரிவிப்பதாக ப்ராட்நோக் தெரிவிக்கிறார்.

நிலையான பரிகாரத்திற்கு இரு நாடுகளும் உறுதியான தீர்மானம் எடுத்தால் மட்டுமே பிரச்சனைகளை தீர்க்க முடியும். பெரும்பான்மையான கஷ்மீரிகளும் பிரச்சனைகளை தீர்க்கவேண்டுமென்று விரும்புகின்றவர்கள் என சர்வே தெரிவிக்கிறது.

சர்வேயில் பங்கேற்ற பாகிஸ்தான் வசமிருக்கு கஷ்மீரின் 27 சதவீதம் பேரும் சமாதான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கின்ற பொழுது இந்தியா வசமிருக்கும் கஷ்மீரில் உள்ளவர்கள் 57 சதவீதம் பேர் இதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர்:எதிர்காலத்தைக் குறித்து கஷ்மீரிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு"

கருத்துரையிடுக