1 ஜூன், 2010

துப்பாக்கிச்சூடு ஸ்ரீ ரவிசங்கரை குறிவைத்து நடத்தப்பட்டது அல்ல- ப.சிதம்பரம்

புதுடெல்லி:பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் ஹிந்து ஆன்மீக வாதி ரவிசங்கரின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இத்தாக்குதல் ரவிசங்கரை குறிவைத்து நடத்தப்பட்டது அல்ல என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ரவிசங்கரின் சீடர்களுக்கு மத்தியிலான மோதல்தான் துப்பாக்கிச்சூட்டில் முடிவடைந்ததாக ப.சிதம்பரம் கூறினார்.

ரவிசங்கரின் கார் புறப்பட்டு ஐந்து நிமிடங்கள் கழித்துதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அதனால் ரவி சங்கரை குறிவைத்துதான் நடத்தப்பட்டது எனக்கூற இயலாது என ப.சிதம்பர்ம தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துப்பாக்கிச்சூடு ஸ்ரீ ரவிசங்கரை குறிவைத்து நடத்தப்பட்டது அல்ல- ப.சிதம்பரம்"

கருத்துரையிடுக