9 ஜூன், 2010

குற்றால சீசன் தொடங்கியது

சில்லென்று வீசும் சாரலுடன் குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன்,ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்கள் ஆகும். குற்றாலம் பகுதியில் மஞ்சள் வெயிலும், மெல்லிய சாரலும்,மனதுக்கு இதமான தென்றல் காற்றும் ஒரே நேரத்தில் காணப்படுவது குற்றாலம் சீசனுக்கே உரிய தனிச்சிறப்பு.

மேற்கு தொடர்ச்சி மலையின் அதிக மூலிகை வளம் நிறைந்த பகுதிகள் வழியாக வரும் நீர் அருவிகளில் விழுவதால் இந்த தண்ணீருக்கு நோய் தீர்க்கும் ஆற்றல் உள்ளது என்பது மக்களின் நம்பிக்கை.

இத்தைகைய சிறப்பு மிக்க சீசன் இந்த ஆண்டு சில்லென்ற காற்று, சாரலுடன் நேற்று தொடங்கியது. நேற்று முன்தினம் மதியம் வரை வறண்டு கிடந்த பேரருவி, மாலையில் பெய்த சாரல் மழை காரணமாக நேற்று அதிகாலை முதல் தண்ணீர் விழத் தொடங்கியது.பேரருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் பரவலாக கொட்டியது.

இதே போல் ஐந்தருவியிலும், தண்ணீர் நன்றாக விழுந்தது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் மேகக்கூட்டம் திரண்டு காணப்படுகிறது. நேற்று குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் தண்ணீர் கொட்டியதை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குற்றால சீசன் தொடங்கியது"

கருத்துரையிடுக