9 ஜூன், 2010

காஸ்ஸா தடை:இஸ்ரேலின் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம்

இஸ்தான்புல்:காஸ்ஸா மக்களுக்கெதிராக இஸ்ரேல் தொடர்ந்து வரும் தடையை இந்தியா காட்டமான வார்த்தைகளால் கண்டித்துள்ளது.

'இப்பகுதியில் பாதுகாப்பையும், சமாதானத்தையும் புனரமைக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலாக பேச்சுவார்த்தைதான் பரிகாரம்' என மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா தெரிவித்தார்.

'நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக இஸ்ரேலின் தடையை மீறிச்சென்ற உதவிக்கப்பல்களின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த முடியாது.

காஸ்ஸாவில் இஸ்ரேல் தொடரும் தடை மிக மோசமான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது'. இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார்.

ஆசிய நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்காக துருக்கியில் நடந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங்கின் பிரதிநிதியாக பங்கேற்றார் சர்மா.

ஆசிய நாடுகளைச் சார்ந்த அமைச்சர்கள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காஸ்ஸா தடை:இஸ்ரேலின் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம்"

கருத்துரையிடுக