30 ஜூன், 2010

அமெரிக்காவின் விண்வெளிக் கொள்கை: தெற்காசிய நாடுகளுக்கு முக்கியத்துவம்

வாஷிங்டன்:அமெரிக்காவின் புதிய விண்வெளிக் கொள்கையை அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் முன்னோடியாக உள்ள அமெரிக்கா நேற்று முன்தினம் புதிய விண்வெளிக் கொள்கையை வெளியிட்டது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்கு இணக்கமாக செயல்படுவதாக இந்த கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அதிபர் ஒபாமா குறிப்பிடுகையில்;"பூமியை பற்றிய கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும"' என்றார்.

விண்வெளி விஞ்ஞானம் குறித்த ஆய்வு, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், இயற்கை சீரழிவை முன்பே தடுப்பது உள்ளிட்ட விண்வெளி குறித்த நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ரோபோ உதவியுடன் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையும் தாண்டி உள்ள கிரகத்தில் ரோபோ மற்றும் மனிதனை பாதுகாப்பாக அனுப்பி நீண்ட ஆய்வு மேற்கொள்வது குறித்த சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்.விண்வெளி ஆய்வில் அதிக இளைஞர்களை ஈர்ப்பதற்கு உரிய வழிவகைகள் செய்யப்படும்.

சர்வதேச விதியை மதித்து எல்லா நாடுகளும் அமைதி நடவடிக்கைக்காக விண்வெளியை பயன்படுத்த உரிமை உண்டு.

சர்வதேச விதிப்படி விண்வெளியையோ, வேற்று கிரகங்களையோ எந்த ஒரு நாடும் உரிமை கொண்டாட முடியாது. எந்த வித தலையீடும் இல்லாமல் அனைத்து நாடுகளுக்கும் விண்வெளியிலோ, மாற்று கிரகத்திலோ ஆய்வு செய்ய உரிமை உண்டு.சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், கண்டறிந்த விஷயங்களை பரிமாறிக் கொள்ளவும் வேண்டும்.

குறிப்பாக விண்கற்கள் பூமியில் மோதுவது போன்ற விஷயங்களை பாதுகாப்பு கருதி இந்தத் தகவலை பரிமாறிக்கொள்ளலாம். விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண் ஓடத்திலோ அல்லது செயற்கைக்கோளிலோ கோளாறு ஏற்பட்டால் அதை சரிசெய்ய தொழில் நுட்ப ரீதியாக மற்ற நாடுகளுக்கு உதவலாம். இவ்வாறு அமெரிக்காவின் புதிய விண்வெளிக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்காவின் விண்வெளிக் கொள்கை: தெற்காசிய நாடுகளுக்கு முக்கியத்துவம்"

கருத்துரையிடுக