30 ஜூன், 2010

1984-ல் நடைபெற்ற சீக்கியர் கலவரத்திற்கு மன்னிப்பு கேட்டார் மன்மோகன்சிங்!

1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர் எதிர்ப்பு கலவரத்திற்காக பிரதமர் மன்மோகன் சிங் சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரினார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தமது கட்சி மன்னிப்பு கேட்டதாக குறிப்பிட்ட பிரதமர் அது வலி நிறைந்த ஒன்று என வர்ணித்தார். மேலும் குற்றவாளிகளை தப்பவிடமாட்டோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

உறவுகளை இழந்து வாடுபவர்களுக்கு நிவாரணம் ஒருபோதும் ஈடாகாது என்றும் தெரிவித்த அவர், காயங்களை மறந்து, காலங்களை கடந்து சீக்கிய சமூகம் முன்னேறும் என உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார்.

சீக்கியர்கள் குறிப்பிடத்தக்க அளவு வாழும் கனடாவில் பிரதமர் பேசிய பேச்சு முக்கியத்துவம் மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
source:inneram
சீக்கிய கலவரத்திற்கு மன்னிப்பும், நிவாரணமும் வழங்கிய மத்திய அரசு பல கலவரங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தை கண்டுகொள்ளுமா?

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "1984-ல் நடைபெற்ற சீக்கியர் கலவரத்திற்கு மன்னிப்பு கேட்டார் மன்மோகன்சிங்!"

கருத்துரையிடுக