இந்தியாவை சேர்ந்த திவ்யந்து சின்கா (49) அமெரிக்காவில் சீமென்ஸ் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். சின்கா நியூஜெர்சி நகரில் உள்ள ஓல்டு பிரிஜ் என்ற இடத்தில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அவருடைய 2 மகன்களும் உடன் சென்றனர்.
அப்போது அங்கு 3 வாலிபர்கள் காரில் வந்தனர். அவர்கள் திவ்யந்து சின்கா மற்றும் 2 மகன்களையும் அடித்து உதைத்தனர். அதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி திவ்யந்து சின்கா உயிர் இழந்தார்.
இது தொடர்பாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். எதற்காக அவர்கள் தாக்கினார்கள் என்ற விவரம் வெளியிடப்பட வில்லை. இனவெறி காரணமாக தாக்குதல் நடந்ததா? என்றும் தெரியவில்லை.அமெரிக்க போலீசார் இதுபற்றி கூறும்போது, விசாரணை முற்றிலும் முடிந்த பிறகே தகவல் சொல்ல முடியும் என்றனர்.
0 கருத்துகள்: on "இந்திய விஞ்ஞானி அமெரிக்காவில் அடித்துக் கொலை"
கருத்துரையிடுக