14 ஜூன், 2010

‘ஃப்ரீடம் ஃபுளோடில்லா படுகொலைகளை துருக்கி ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை’ – அப்துல்லாஹ் குல்

இஸ்தான்புல்:ஃப்ரீடம் ஃபுளோடில்லா துயர்துடைப்புக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தி துருக்கியர்கள் பலரைப் படுகொலை செய்து, இன்னும் பலரை படுகாயமடையச் செய்த இஸ்ரேலிய அடாவடித்தனத்தைத் தமது நாடு ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை என்று துருக்கிய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (12.06.2010) 'லி-மொன்டே' எனும் ஃபிரான்ஸியப் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியின்போது ஃப்ரீடம் ஃபுளோடில்லா மீதான இஸ்ரேலியத் தாக்குதலானது, பயங்கரவாத செயலை ஒத்திருக்கிறது என்று வர்ணித்துள்ளார்.

தான் மேற்கொண்ட இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரல், ஏதேனும் ஒருவகையில் இழப்பீடு வழங்குதல், காஸா மீதான முற்றுகையை நீக்குதல் முதலான நடவடிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்ளாத வரையில் அதன் அடாவடிச் செயற்பாட்டை எளிதில் மறந்துவிடுவது எவ்வகையிலும் சாத்தியமில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: PIC

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "‘ஃப்ரீடம் ஃபுளோடில்லா படுகொலைகளை துருக்கி ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை’ – அப்துல்லாஹ் குல்"

கருத்துரையிடுக