5 ஜூன், 2010

ஓராண்டை நிறைவு செய்தது பாலைவனத் தூது

ஊடகத்தில் முஸ்லிம்களின் பங்களிப்புக் குறித்து கவலை முஸ்லிம் சமூகத்தில் என்றும் நிலைக்கொள்ளும் ஒன்றாகும்.

இதன் விளைவு இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் தீயசக்திகளாக சித்தரிக்கும் போக்கை பிரபல ஊடகங்கள் கூட கடமையே கண்ணாக கருதி தொடர்ந்து ஆற்றிவருவதை கண்ணுறுகிறோம்.

இதற்கு என்ன தீர்வு?

கவலைப்படுவதாலோ அல்லது இஸ்லாத்திற்கெதிரான செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் மீது கோபம் கொள்வதிலோ மட்டும் எவ்வித பயனும் விளையப் போவதில்லை. இதற்கு நபிகளாரின் கார்ட்டூன் தொடர்பான விவகாரம் போதுமான உதாரணமாகும்.

இந்நிலையில் உண்மையான செய்திகளை சமுதாயத்திற்கு அளிக்கவேண்டும் என்ற ஆவலில் பல முஸ்லிம் தனிநபர்களும், அமைப்புகளும் தம்மை இப்பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். கேரள மாநில முஸ்லிம்கள் இதற்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் முஸ்லிம்களின் ஊடக பங்களிப்பு போதுமானதாக இல்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

இன்றைகாலக்கட்டத்தில் இணையமும் ஊடகத்தின் தவிர்க்க முடியாத முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இதனை கருத்தில் கொண்டு அன்றாடச் செய்திகள், விமர்சனங்கள், கட்டுரைகள் ஆகியவற்றை உண்மையானத் தன்மையுடன் தொடர்ந்து தமிழ் பேசும் நல்லுள்ளங்களுக்கு அளிக்கவேண்டும் நோக்கத்தில் சில வளைகுடா வாழ் தமிழ் பேசும் நல்லுள்ளங்களால் உருவானதுதான் பாலைவனத்தூது வலைப்பூ.

பாலைவனத்தூதின் சேவையை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் இணையத் தொடர்புடைய ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் பெற்று வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்ட பாலைவனத் தூது ஓராண்டை நிறைவுசெய்துள்ளது என்பதை மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் பாலைவனத்தூது விரைவில் http://www.thoothuonline.com/ என்ற இணையத்தளமாக பரிணாம வளர்ச்சியை அடைய உள்ளது.

தமிழ் பேசும் சான்றோர்கள் அனைவரும் தொடர்ந்து பாலைவனத்தூதின் சேவையை பயன்படுத்துவதுடன் தங்களின் மேலான ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் எங்களுக்கு அனுப்பித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவன்,
பாலைவனத்தூது செய்தியாளர்கள் குழு
---------------------------------------------------------------------------
பாலைவனத் தூதின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வாசகர்களாகிய உங்களின் படைப்புகள் மற்றும் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக மாபெரும் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகிறோம்.

கட்டுரைப் போட்டியின் தலைப்புகள் மற்றும் நிபந்தனைகளை படத்தின் மீது க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 கருத்துகள்: on "ஓராண்டை நிறைவு செய்தது பாலைவனத் தூது"

Kather சொன்னது…

When it started whether 2007 or 2009? ..Please correct it.

koothanallur muslims சொன்னது…

Best of Luck... Allah will help us...


Best Regards

Koothanallur Muslims

HAFIZ MUHAMMED HUSSAIN சொன்னது…

AL HAMDULILLAH VERY GOOD
VERY HAPPY

பெயரில்லா சொன்னது…

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

பாலைவனத்தூது தனது பணியை அல்லாஹ்வின் உதவியோடு தொடர்ந்து ஆற்றவேண்டும்.அல்லாஹ் அதற்கு கிருபைச்செய்வானாக! ஆமீன்!

Mohamed Fareed சொன்னது…

Best of Luck... Allah will help us...

கருத்துரையிடுக