இன்று உலக சுற்றுச் சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் ஜூன்'5ம் நாள் உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.இன்றைய தினம் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.அரசியல் கவனத்தையும், செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, கடந்த 1974ம் ஆண்டு முதல் ஜூன் 5ம் தேதியை பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி கொண்டாடி வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி (இன்று), 'பல உயிரினங்கள் ஒரே கிரகம் ஒரே எதிர்காலம்’ என்ற கருத்தின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
உயிரினங்கள் தங்களுக்கிடையேயும்,அவைகளின் சுற்றுப்புறச் சூழல்களுக்கிடையேயும் நடத்தும் வினைகள் மற்றும் எதிர்வினைகளின் ஒட்டுமொத்தம் தான் சுற்றுசூழல்.
உலகின் எல்லா உயிரினங்களும் அவை வாழ்வதற்காக இயற்கையையே நம்பி இருக்கின்றன. மனிதனைப் பொறுத்தவரை ஆரம்பக் காலக்கட்டத்தில் காய், கனிகளுக்கும், வேட்டைக்கும் இயற்கையையே நம்பியிருந்தான். பின்னர் கால்நடைகளுக்கும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களுக்கும் இயற்கையை நம்பி வாழ்ந்தான் மனிதன்.பின்னர் விதை விதைத்து விவசாயம் செய்தான் இதற்கும் மனிதனுக்கு இயற்கையே தேவைப்பட்டது. தொழில்யுகத்திலும் மூலப்பொருட்களுக்கு மனிதன் இயற்கையை நம்பவேண்டியுள்ளது. இவ்வாறு பொருளாதார, சமூக வளர்ச்சி என்பது இயற்கை அதாவது சுற்றுச் சூழலோடு பின்னிப்பிணைந்துள்ளது.
ஒருங்கிணந்த மற்றும் ஆசுவாசமான வாழ்விற்கு தேவையான கலாச்சாரம்தான் சுற்றுச்சூழல் கலாச்சாரம். இயற்கையின் காரணிகளான வாழ்வியல்-உலகியல்-சமூக-கலாச்சார வினை எதிர்வினைகள் சுற்றுச் சூழலின் சுமூகமான சூழலை நிலைபெறச் செய்கின்றன.
ஆனால் மனிதன் தனது சுயநலவாதத்தால் சுற்றுச் சூழலின் சுமூகமான நிலையை கெடுத்து வருகிறான். ஒவ்வொன்றுக்கிற்கும் ஒரு நீதி உண்டு. சுற்றுச் சூழலுக்கும் ஒரு நீதி உண்டு.அந்த நீதியின் வரம்புகளை கடக்கும் பொழுதுதான் பிரச்சனைகளும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இப்பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.
இன்று வளர்ச்சி என்ற பெயரால் மனிதன் இயற்கை வளங்களை அழிப்பதில் முற்படுகிறான். இயற்கை வளங்களான கனிமப்பொருட்கள் அதிகம் கிடைக்கும் பகுதிகளில் வாழும் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் மக்களை அடித்து துரத்தி விட்டு அந்த கனிம வளங்களை தன் வசப்படுத்த மனிதர்களில் ஒரு சிலர் நடத்தும் முயற்சிகளால் ஏற்படும் விளைவுகள்தான் போராட்டங்களாகவும், வன்முறைகளாகவும் வெடிக்கின்றன.
இதில் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால் நாட்டையும், நாட்டுமக்களின் நலன்களையும் பொறுப்பேற்றுக் கொண்ட அரசுகளே இத்தகைய இயற்கையின் வளங்களை சுரண்டி சுற்றுச் சூழலை கெடுக்கும் வேலைகளில் ஈடுபடுவதுதான்.
இயற்கை வளங்களை அழித்துவிட்டு வளர்ச்சி என்பது தேவையில்லாத ஒன்றாகும். இந்த உலகை அச்சுறுத்தும் கொள்கைகளாக வளர்ந்துள்ள உலகமயமாக்கல், தனியார்மயம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், நுகர்வுக் கலாச்சாரம் போன்ற கொள்கைகளால் சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது.
பிற நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக அந்நாட்டின் மீது குண்டுகளை வீசி அங்கு வாழும் அப்பாவி மக்களை அழிப்பதுடன் ஒரு தேசத்தின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன உலகில் தன்னை நீதியை நிலைநாட்டுவோனாக காட்டிக்கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியம்.
ஜப்பானின் நாகசாகி, யுரோஷிமா, ஈராக், ஆப்கானிஸ்தான், வியட்நாம் போன்ற நாடுகளை உதாரணமாக கூறலாம்.
இன்று புவி வெப்பமடைவது பற்றி கவலைக் கொள்கிறார்கள். அதிலும் வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்ச்சியடையாத ஏழை நாடுகளின் மீதுதான் குற்றஞ்சாட்டுகின்றன.
நாம் இன்றைய கோடைக்காலத்தை பற்றி சிந்தித்து பார்த்தால் புவி வெப்பமடைதலின் அனுபவத்தை உணரமுடியும். வளைகுடா நாடுகளில் முந்தைய அதாவது 1970 அல்லது 80 ஆம் ஆண்டுகளில் ஒரு கோடைகாலம் என்றால் எப்படியிருந்தது தற்பொழுது எப்படியுள்ளது என்பதை சிந்தித்தால் நிறைய வேறுபாடுகளை உணரலாம்.
சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் இரவு ஒரு 12.00 மணி வரை இருக்கும். அதன் பிறகு நிலக் காற்று வீசி நம்மை ஆற்றுப்படுத்தும். ஆனால் இன்றைய நிலை அவ்வாறு இல்லை. காலை 4 அல்லது 5 மணி வரை வெப்பத்தின் தாக்கம் கொடூரமாக உள்ளதை நாம் உணர்கிறோம். இதற்கு காரணம் என்ன?
நாம் எவ்வளவு அடுக்கு மாடிக் குடியிருப்புகளை கட்டியுள்ளோம், எவ்வளவு நெடுஞ்சாலைகளையும், இருப்புப் பாதைகளையும் அமைத்துள்ளோம், அதற்காக எவ்வளவு மரங்களை அழித்துள்ளோம். பிறகு காற்று எங்கிருந்து வரும்?
நகரங்களில் கட்டுப்பாடின்றி பெருகி வரும் மக்கள் தொகையால் குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் மலை மலையாக புற நகர்ப்பகுதிகளில் குவிந்து வருகின்றன. அவற்றால் ஏற்படும் பாதிப்பு வீட்டினுள் ஏ/சி. போட்டுக் கொண்டு உறங்கும் மக்களையும் விட்டு வைக்காது என்பதே உண்மை.
நாம் படைக்காத ஒன்றை அழிப்பதற்கான உரிமையை மனிதன் எங்கிருந்து பெற்றான். இயற்கை வளங்களான காடு, மலை, நீர் ஆதாரங்களை அழித்துவிட்டு மனிதன் இந்த பூவுலகிற்கு பதிலாகக் கொடுத்தது என்ன? வன்முறைகளும், போர்களும், நோய்களும், சுற்றுச்சூழல் பாதிப்புகளும் தானே. இதைத்தவிர வேறு என்ன?
18 ஆம் நூற்றாண்டின் சிந்தனைவாதியாக கருதப்படும் ரூசோ விஞ்ஞானத்தின் கருத்தினடிப்படையில் காட்டுமிராண்டியான சமுதாயமாக கருதப்படும் சமூகத்தை உன்னத ஆதிவாசி சமூகம் என்றும், வளர்ச்சியடைந்த இன்றைய நாகரீகத்தை காட்டுமிராண்டி நாகரீகம் என்றும் குறிப்பிடுகிறார்.
பூமி தோன்றி பல கோடி வருடங்களுக்கு பின்னால் தோன்றிய மனித இனம் தன்னைச் சுற்றியுள்ள உயிரினங்களுடனும்,வஸ்துக்களுடனும், இயற்கையுடனும் இயைந்து வாழாமல் அதன் வளங்களை சுரண்டி இன்று வேற்றுக் கிரகங்களையும் ஆக்கிரமிக்க திட்டமிடும் கொடூர சிந்தனையும் தான் மட்டுமே எல்லாவற்றிற்கும் அதிபதி என்ற மமதையும் தான் இன்று நாம் சந்தித்துவரும் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை நினைவுக்கூறுவதால் மட்டும் எந்த புண்ணியமும் விளையப் போவதில்லை. சுயநலப்போக்கான பொய்யான அராஜக வாழ்க்கையை எப்பொழுது மனிதன் விட்டொழிக்கின்றானோ அன்றே மனிதன் இயற்கைக்கு நண்பனாவான்.
பூமி உள்ளிட்ட பிரபஞ்சத்தையும் அதில் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரனங்களையும் படைத்து பாதுகாத்து பரிபாலித்து வரும் வல்லமைப்படைத்த இறைவனான அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு மனிதன் தான் காரணம் எனக் கூறுகிறான்.
"மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்". (அல்குர்ஆன் 30:41)
மேலும் அவன் தான் படைத்த படைப்பினங்களைக் குறித்து சிந்திக்கச் சொல்லும் வசனங்கள் திருக்-குர்ஆனில் ஏராளமாக காணக்கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் யார் படைத்தார் என வினவுகிறான் இறைவன்.
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) ஒரு முஸ்லிமின் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள். " முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்". [நூல்;புஹாரி]
அத்தோடு சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தவோ அதனை அசுத்தபடுத்தவோ செய்யாதீர்கள் என எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
ஏன் போர்க்களங்களில் கூட மரங்களை வெட்டக்கூடாது என கட்டளை பிறப்பிக்கின்றார்கள். ஆகவே இவ்வுலகில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கொள்கைகளால் நிச்சயமாக சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண இயலாது என்பதுதான் உண்மை.
ஏனெனில் கொள்கையற்ற இறை நம்பிக்கையற்ற தன்னை படைத்தவனின் மீது அச்சமற்ற மனிதர்களால் நிச்சயமாக நீதியை செலுத்த முடியாது என்பதுதான் உண்மை.
ஆகவே அனைத்திலும் நீதியை போதிக்கும் மார்க்கமான இஸ்லாத்தின் வழி நின்று சுற்றுச் சூழலை பாதுகாப்போம்!

0 கருத்துகள்: on "இன்று உலக சுற்றுச் சூழல் தினம்"
கருத்துரையிடுக