தென் கொரியாவுடன் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று வட கொரியா எச்சரித்துள்ளது.
அண்மையில் வட கொரிய போர் கப்பல் ஒன்று,தென் கொரிய கடல் எல்லைப் பகுதியில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டது.

இந்நிலையில் தென் கொரியாதான் தங்கள் நாட்டு கப்பலை மூழ்கடித்ததாக வட கொரியா குற்றம் சாற்றியது.அத்துடன் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாகவும் அது கூறியிருந்தது.
ஆனால் கப்பலை தாங்கள் மூழ்கடிக்கவில்லை என்று தென் கொரியா அதனை மறுத்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் ஜெனீவாவில் ஆயுத ஒழிப்பு தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வட கொரிய தூதரக அதிகாரி ரி ஜாங் கான், கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளது என்றும், எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்றும் கூறினார்.
வட கொரியாவின் போர் கப்பலை மூழ்கடித்து நிலைமையை மோசமாக்கியது தென் கொரியாவும், அமெரிக்காவும்தான் என்றும் குற்றம் சாற்றிய அவர், ஆனால் இந்த இருநாடுகளும் வட கொரியவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்க கோருவதோடு,வட கொரியாவை தனிமைப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார்.

z9world
0 கருத்துகள்: on "தென் கொரியாவுடன் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்: வட கொரியா எச்சரிக்கை"
கருத்துரையிடுக