புதுடெல்லி:கஷ்மீரில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி போலி என்கவுண்டரில் கொல்லவேண்டிய நபர்களைக் கொண்டுவர இடைத்தரகர்களுக்கு மேஜர் பணம் கொடுத்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அறியப்படாத தீவிரவாதிகளை பிடித்துக் கொண்டுவர மேஜர் தனக்கும் தனது இரண்டு கூட்டாளிகளுக்கும் 50 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் கொடுத்தார் என கைது செய்யப்பட்ட குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலி என்கவுண்டர் மூலம் அப்பாவிகளை சுட்டுக் கொன்றதற்கு மேஜருக்கு 4.5 லட்சம் ரூபாய் சம்மானம் கிடைத்தது. சம்மானத் தொகையை பெறுவதற்கும், பதவி உயர்வுக்காகவும் மேஜர் இந்த போலி என்கவுண்டர் கொலைகளை செய்ததாக போலீஸ் தெரிவிக்கிறது.
ஆரம்பக்கட்ட விசாரணை பூர்த்தியடைந்ததாகவும், உயர் அதிகாரியான மேஜரை கஸ்டடியில் எடுப்பதற்கு ராணுவத்திற்கு இன்று அல்லது நாளை கடிதம் அனுப்பப்படும் என்று போலீஸ் அறிவித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர் போலி என்கவுண்டர்:கொலை செய்வதற்கு ஆட்களை கொண்டுவர மேஜர் பணம் கொடுத்தார்"
கருத்துரையிடுக